தமிழ் முருகன் என்பவன் யார்?
தமிழ் முருகன் கவிஞர் அறிவுமதி தர்மலிங்கம் அறக்கட்டளை பதிப்பகம் இந்த நூலுக்கான விமர்சனத்தை வெளியிடும்போது அநேகமாக ஒரு வார இதழில் அதன் ஆசிரியர் முருகன் தொடரை சில வாரங்கள் எழுதியிருப்பார் என நினைக்கிறேன். பதிலுக்கு போட்டியாக இன்னொரு வார இதழின் ஆசிரியர் கருப்பண்ணசாமியின் வரலாற்றை எழுதியிருப்பார்.. போட்டி மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நல்ல விஷயத்தைக் கொண்டு வரக்கூடும். இதெல்லாம் ஒருவித நம்பிக்கை அவ்வளவுதான். அறிவுமதி, நூலில் ஓரிடத்தில் தமிழ் முருகன் தொடரில் கூறும் விஷயத்தை தனிப்பட்ட சாதி, மதம் சார்ந்து பயன்படுத்தவேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், அப்படி பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. நூலைப் பார்ப்போம். நூலில், முருகன் என்பது முருகன் என்பது மட்டுமே, அவன் போர்வீரன், அரசாண்ட மன்னன் என்று கூறப்படுகிறது. இதற்கான இடைச்செருகலையும் விளக்குகிறது. சிவன், பார்வதியின் பிள்ளை கந்தன் என்ற புனைகதைகளை நூல் ஏற்கவில்லை. முருகன் வேறு, கந்தன் வேறு என்று நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். தமிழ் இனத்தின் அடையாளமாக ஒற்றை கடவுளாக முருகனை கூறுவதோடு, அர்த்தமற்ற நெல் தூவுதல் தமிழர் ...