இடுகைகள்

விகடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊடகங்களை அச்சுறுத்தும் அவதூறு வழக்கு எனும் ஆயுதம்! - அதிமுக தொடங்கிய ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடு

படம்
            அவதூறு வழக்கு எனும் ஆயுதம் ! இந்த கட்டுரையை எழுதும்போது வரையில் அறுபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை அரசும் , அரசுத்துறையைச் சேர்ந்தவர்களும் ஊடகங்களின் மீது தொடுத்துள்ளனர் . இந்த அணுகுமுறையை முதன்முதலில் கையில் எடுத்தது . அதிமுக அரசுதான் . இத்தகைய வழக்குகள் இன்றும் கூட செஷன் கோர்ட்டுகளில் இன்றும் வழக்கில் உள்ளன . இதனால் என்ன பயன் விளையும் என நினைக்கிறீர்கள் ? தனது செயல்பாடுகளை யாரும் விமர்சிக்க கூடாது என்ற பாசிச மனப்பான்மையின் கொக்கரிப்புதான் . 1992 ஆம் ஆண்டு தொடங்கிய நடைமுறை இன்று விரிவாகியுள்ளது . சென்னையில் வெளிவரும் ஆங்கில தமிழ் நாளிதழ்கள் அனைத்தின் மீதும் 120 வழக்குகளை ்அதிமுக அரசு தொடுத்தது . இப்படி வழக்கு தொடுத்து ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதோடு இதற்கான செலவுகளும் பெரும் சுமைதான் . அதிமுகவின் ஆட்சிக்குப்பிறகு வந்த திமுக அரசு , ஊடகங்களின் மீதான வழக்கை ஒரே ஆணையில் நீக்கியது . ஆனால் இந்த வழக்கத்தை அப்படியே கடைபிடித்து ஊடகங்களின் மீது 50 வழக்குகளை பதிவு செய்தது . இதனை ரத்து செய்தது அதிமுக அரசுதான் . திமுக , அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் தொ

லவ் இன்ஃபினிட்டி: சோறு முக்கியம் ப்ரோ!

படம்
etsy/pinterest 22 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: லவ் ரஞ்சன். சதீஸ் நிர்வானா வினோத் நல்லவர்தான். ஆனால் தான் இப்படி இருக்கிறோமே என்று நினைக்கும்போது பொங்கி விடுவார். கூட நாம் இருந்தால் எரிமலை லாவா நம்மீது கொட்டிவிடும் இல்லையா? அதேதான் நடந்தது. எனக்கு எப்போதும் சாப்பாடு என்பதைவிட படிப்பு என்பது மீது தனிக்கிறுக்கு இருந்தது. அதற்காக வேலராம மூர்த்தி, பூமணி என்று யோசிக்காதீர்கள். நண்பர்கள் கொடுப்பதை எனக்கு படிக்கலாம் என்று நம்பிக்கை தரும் நூல்களை படிப்பேன். இதனால் ஏற்படும் அவமானங்களை, கிண்டல்களைப் பற்றியெல்லாம் அணுவளவும் கவலைப்படாதிருந்தேன். அது அப்போது. அன்று நன்றாகத்தான் விடிந்தது. சரியாக வியாழக்கிழமைகளில் அதுவும் ஒன்று. நான் கையில் இருந்த வேலை செய்து கிடைத்த பணத்தை சாப்பிட்டு, டீ குடித்தும் கரைத்திருந்தேன். கூடவே தங்கியிருந்த வினோத் அண்ணாவின் நண்பர், சாரங்கிநாதன். என்ன வேலை, ஏதோ பிசினஸ் செய்து நஷ்டமாகி விரக்தியில் இருந்தார். அங்கே வினோத் அண்ணாவின் வீட்டில் ஒருவாரமாக டென்ட் அடித்துவிட்டார். என்னைப்போலவேதான். ஆனால் முடிந்தவரை ஒரு வார்த்தை பேசுகிறாரா

அனைவரையும் சந்தோஷப்படுத்த முடியுமா?

படம்
unsplash டிக்! டிக்! டிக்! ஆனந்த விகடனில் 2008 ஆம் ஆண்டு வெளியான மிஸஸ். டக்ளஸ் எனக்கு பிடித்தமான பகுதி. ஜாலியான பொன்மொழி முதல் சீரியஸ் வரையில் முயற்சிப்பது இப்பகுதியின் சிறப்பு. சந்தோஷம் அல்ல! எல்லோரையும் நீங்கள் சந்தோஷப்படுத்த விரும்பினால் ஒருவரும் அதை விரும்ப மாட்டார்கள். காப்பியடி வாழ்க்கை ஒரு தேர்வு  இதில் ஒரு வசதி என்னவென்றால், இந்தத் தேர்வை நன்றாக எழுத, சிறந்த மாணவரைப் பார்த்து நாம் தாராளமாக காப்பியடிக்கலாம் தப்பில்லை. மெமரி டானிக் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள ஒரே வழி, அதை எப்படியாவது மறக்க முயற்சி செய்வதுதான். பிரிதல் தேடல் உண்மையான நண்பரைப் பிரிவது கடினம் கண்டுபிடிப்பது அதைவிடக் கடினம். 1:60 உங்கள் ஒவ்வொரு நிமிட கோபமும் வீண்டிக்கிறது உங்களின் அறுபது நிமிட ஆனந்தத்தை நன்றி: ஆனந்த விகடன்