நிஜ உலகில் உள்ள வில்லனை வீழ்த்த உதவும் செயற்கை நுண்ணறிவு பாத்திரம்! - ஃப்ரீ கய் 2021
ஃப்ரீகய் ரியான் ரினால்ட்ஸ் ப்ரீசிட்டி எனும் விளையாட்டு இரண்டு கணினி விளையாட்டு வல்லுநர்களின் கோடிங்குகளை திருடி உருவாக்கப்பட்டது. அதனை கண்டுபிடிக்கும் இருவரும் அதனை எப்படி மீட்கின்றனர் என்பதுதான் கதை. கதையில் வரும் நாயகன் ரியான் ரினால்ட்ஸ் செயற்கை நுண்ணறிவு கொண்ட பாத்திரம் ஆகும். உண்மையான வாழ்க்கையில் நாயகன் என்பது கீஸ் எனும் பாத்திரம் ஆகும். படத்தில் ரியான் ரினால்ட்ஸ் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட பாத்திரம்தான். ஆனால் அதனை அவர் புரிந்துகொள்ள மாட்டார். அவருக்கு வங்கியில் வேலை. தினசரி ஒரே மாதிரியான காபியைக் குடித்துவிட்டு வேலைக்கு செல்வார். அவருக்கு வங்கி செக்யூரிட்டிதான் நண்பர். தினசரி அவரது வங்கியில் கொள்ளை நடைபெறும். அதை எதிர்க்காமல் பணத்தை திருடு கொடுப்பது அந்த வங்கியின் வழக்கம். ஒருநாள் இந்த வழக்கத்தை ரியான் ரினால்ஸ்ட் மாற்றுகிறார். அதாவது அவரது பாத்திரமான கய். இதனால் சில நாட்களில் அவர் ப்ளூ சர்ட் என்ற பெயரில் பிரபலமாகிறார். இந்த நேரத்தில் கணினி விளையாட்டுக்குள் வந்து தான் எழுதிய கோடிங்குகளை தேடுகிறார் மிலி என்ற இளம்பெண். அந்த பெண்ணை பார்த்ததும் கய்க...