இடுகைகள்

சைகை மொழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காது கேட்காத மாற்றுத்திறனாளியை காதலிக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை! - சைலன்ட் - ஜப்பான்

படம்
  சைலன்ட் டிவி தொடர் ஜப்பான் - ஜே டிராமா  ராகுட்டன் விக்கி ஆப்   பள்ளிப்பருவ காதல்கதை. பள்ளிப்பருவத்தில் உற்சாகமாக தொடங்கும் காதல்,   பின்னாளில் காதலனின் உடல்நலப் பிரச்னையால் பிரிந்து மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக தொடங்குகிறது. அவர்களின் காதல் மீண்டும் தொடங்கியதா, ஒன்று சேர்ந்ததா என்பதே கதை. ஒரு எபிசோட் ஒரு மணிநேரம் என மொத்தம் பதினொரு எபிசோடுகள் உள்ளன. காசு கட்டினால் விளம்பரத்தொல்லையின்றி பார்க்கலாம். இல்லையென்றால் விளம்பரத்தைப் பார்க்கவும் ஏராளமான டேட்டா செலவாகும். சௌக்கு என்ற சகுரா, பள்ளியில் படிக்கிறார். இவரை மினாட்டோ என்ற மாணவர் ஆவோவா என்ற தனது தோழிக்கு அறிமுகப்படுத்துகிறார். அவளுக்கு சகுராவைப் பார்த்த உடனே காதல் தோன்றிவிடுகிறது. சகுராவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.   எப்போதும் பாப் பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுக்கு ஸ்பிட்ஸ் எனும் இசைக்குழுவின் பாடல்கள் இஷ்டம். அதுவரை அப்படி பாடல்கள் கேட்காத ஆவோவா மெல்ல இசையின் வசமாகிறாள். சௌக்குவிடம் இரவல் வாங்கும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தனது படிப்பைத் தொடர்கிறாள். வகுப்பறையில் வெளியில் என சகுராவும் ஆவோவாவும

சைலண்ட் கஃபே கலாசாரம்!

படம்
ozy சைலண்ட் கஃபே அதிகரிக்கும் காரணம் என்ன? பிரான்ஸின் பாரீசிலுள்ள மொராக்கன் கஃபேவில் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம். இங்கு சமையல்காரர் தொடங்கி வெய்ட்டர் வரை அனைவருமே காது கேளாத மாற்றுத்திறனாளிகள். இங்கு உங்களுக்குத் தேவையான உணவு வகைகளை போர்டில் எழுதவேண்டும். அதனை அவர்கள் உங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறுவார்கள். அந்த உணவகத்தின் பெயர் 1000 & 1 signes. 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் காதுகேளாதவர் உரிமையாளரைக் கொண்ட உணவகம் இது. 2016 ஆம் ஆண்டு ஸாக்ரெப்- குரோஷியா, கோலோஜின்- ஜெர்மனி, லண்டன், யுனைடெட் கிங்டம், டெல்லி, இந்தியா, கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா, பாங்காக், தாய்லாந்து, கோகோட்டா, கொலம்பியா ஆகிய நாடுகளிலும் காதுகேளாதோர் உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மலேசியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், காதுகேளாதோருக்கான கஃபே ஒன்றை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் புதிய கஃபே ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சியையும் ஸ்டார்பக்ஸ் செய்துள்ளது. நிறுவனர், சித் நூவர், ozy பிரெஞ்சு மக்கள், காதுகேளாதோரின் உலகைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இது. மெனுவில் சைகை