சைலண்ட் கஃபே கலாசாரம்!


The french sign language alphabet with ornate border, above wellcome v0016556 (retouched)
ozy









சைலண்ட் கஃபே அதிகரிக்கும் காரணம் என்ன?

பிரான்ஸின் பாரீசிலுள்ள மொராக்கன் கஃபேவில் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம். இங்கு சமையல்காரர் தொடங்கி வெய்ட்டர் வரை அனைவருமே காது கேளாத மாற்றுத்திறனாளிகள். இங்கு உங்களுக்குத் தேவையான உணவு வகைகளை போர்டில் எழுதவேண்டும். அதனை அவர்கள் உங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறுவார்கள்.

அந்த உணவகத்தின் பெயர் 1000 & 1 signes. 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் காதுகேளாதவர் உரிமையாளரைக் கொண்ட உணவகம் இது. 2016 ஆம் ஆண்டு ஸாக்ரெப்- குரோஷியா, கோலோஜின்- ஜெர்மனி, லண்டன், யுனைடெட் கிங்டம், டெல்லி, இந்தியா, கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா, பாங்காக், தாய்லாந்து, கோகோட்டா, கொலம்பியா ஆகிய நாடுகளிலும் காதுகேளாதோர் உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மலேசியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், காதுகேளாதோருக்கான கஃபே ஒன்றை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் புதிய கஃபே ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சியையும் ஸ்டார்பக்ஸ் செய்துள்ளது.


Dsc05949 copy
நிறுவனர், சித் நூவர், ozy

பிரெஞ்சு மக்கள், காதுகேளாதோரின் உலகைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இது. மெனுவில் சைகை மொழியில்  உணவு வகைகளை அச்சிட்டு உள்ளனர். இவரது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் பேர் கூர்மையான செவித்திறன் கொண்டவர்கள்தான்.


ஜெர்மனியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காதுகேளாதோர்தான். இவர்களை வைத்து எப்படி உணவகம் நடத்துகிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் சைகை உணவத்தில் நீர், உணவு என்பதை உங்களால் சொல்ல முடிந்தால் தேவையான உணவுகளையும் கூற முடியும்தானே? அந்த நம்பிக்கையில் இந்த உணவகங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பான மேலும் தகவல்களை அறிய, https://www.youtube.com/watch?time_continue=95&v=L1inhbr5kH8 லிங்க்கை சொடுக்குங்கள்.