குப்பைகளை மறுசுழற்சி செய்யத் தடுமாறும் தமிழகம்!




Related image
Pammal municipality 




கழிவு மேலாண்மையில் தடுமாறும் தமிழகம்!

தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தினசரி உருவாகும் 14 ஆயிரத்து 500 டன் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் தடுமாறி வருகிறது.

மத்திய அரசு, திடக்கழிவுகளை கையாள்வதற்கான கொள்கைகளை புதுப்பித்துள்ளது. மறுபுறம்,  உச்ச நீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்து அபராத தண்டனைகளை விதித்துள்ளது. இதெல்லாம் எதற்கு? வீடுதோறும் அரசு பெறும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடர்பாகத்தான்.  தமிழக அரசு, இதுதொடர்பான புதியகொள்கைகள் உருவாக்கி ஆறுமாதங்கள் ஆகின்றன. ஆனால், திட்டம் இன்னும் செயற்பாட்டிற்கு வரவில்லை.

கொள்கை குழப்பம்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 124 நகராட்சிகளும், 528 நகர பஞ்சாயத்துகளும் இயங்கி வருகின்றன. இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் தினசரி 5 ஆயிரம் டன் கழிவுகள் உருவாகின்றன. பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உருவாகும் கழிவுகளின் அளவு 7 ஆயிரத்து 600 டன். நகர பஞ்சாயத்துகளின் கழிவு அளவு 2 ஆயிரம் டன்.
தமிழக அரசு தற்போது உருவாக்கி வரும் கழிவு மேலாண்மை கொள்கையில், மக்களின் வீடுகளில் பெறும் கழிவுகளை என்ன செய்வது என்பது குறித்த திட்டங்களே குறிப்பிடப்படவில்லை. விதிமீறல்களுக்கு அபராதமும் கிடையாது.
விதிகள்: பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே குப்பைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பெருமளவு கழிவுகளை உருவாக்குபவரே அதனை மறுசுழற்சி செய்யவேண்டும்.

உள்ளூர் நிர்வாகம் தத்தமது பகுதிகளிலுள்ள வீடுகளில் கழிவுகளைப் பெற்றுச்செல்வது கட்டாயமாகி உள்ளது. இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வீடுகளில் பெறும் கழிவுகளைப் பிரித்துப் பெற்று அதனை எரிபொருள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். குளிர்ந்த தட்பவெப்பம் கொண்ட இந்நாடுகளில் சுத்திகரிப்பு என்பது எளிதல்ல.

மறுசுழற்சி மாற்றம்

இந்தியாவில் மறுசுழற்சி என்பது உலர்ந்த கழிவுகளை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு விற்பது, உரத் தயாரிப்பு என தனி பொருளாதாரமாகவே இயங்கி வருகிறது. தமிழகம் சில கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதில் தடுமாறி வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் சுத்திகரிப்பு, உரமாக்குதல் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதை பாராட்ட வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு திடக்கழிவுகளை மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதில் நடந்த மேம்பாடுகள் மிக குறைவு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேங்கடமண்டலம் மின்சார தயாரிப்பு நிலையம் உள்ளது. இங்கு 300 டன் கழிவுகளை மறுசுழற்சி செய்ய  நூறுகோடி செலவாகிறது.

தெளிவான நோக்கம்

மறுசுழற்சி கழிவுகளுக்கு இதுசரி. மறுசுழற்சி செய்ய  முடியாதவை பள்ளிக்கரணை, ஜமீன் பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நிலங்களில் கொட்டப்பட்டு உள்ளன. ”தமிழகத்தில் வீடுகளிலிருந்து கழிவுகள் பெறப்படுகின்றன. இதில், பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.” என்றார் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ்.

கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாக்குவதில் முன்னோடி, நம் அண்டை மாநிலமான ஆந்திரம். இங்கு ஒப்பந்ததாரர்கள் உருவாக்கும் ஒவ்வொரு டன் உரத்திற்கும் ஆந்திர அரசு கணக்கிட்டு தொகையை வழங்குகிறது. இத்தகைய தெளிவான கொள்கை தமிழகத்தில் உருவாகப்படவில்லை.

“நாம் கொள்கை மற்றும் செயற்பாடு இரண்டும் வேறுபட்டவை.  பிளாஸ்டிக்கை தடை செய்தது, நம் வாழ்வில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் கொள்கை முடிவு. ஆனால் வீடுதோறும் சென்று கழிவுகளை பெறுவது கொள்கை முடிவு அல்ல. இக்கழிவுகள் நிலத்தில் தேங்காமல் விதிகளை இயற்றுவதே இதற்கு தீர்வு” என்றார் நோ டம்ப்(No Dumb) தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ் பண்டாரி.

2015 ஆம் ஆண்டு தொடங்கிய ஸ்வச் பாரத், ஸ்வச் சர்வேக்சன் ஆகிய திட்டங்களை தமிழக அரசு செயற்படுத்தியது. பிரசாரம், மெஷின்கள், போக்குவரத்து வாகனங்கள் என செயற்பாடு தொடங்காமல் அரசு இப்பணிக்காக செலவழித்த தொகை ரூ.500 கோடி.

 கிராமங்களில் கழிவுகள் குறைவு என்பதால், நிலத்தில் குவிக்கப்படும் கழிவுகளின் அளவு குறைவு. ஆனால் நகரத்தில் தினசரி தோராயமாக 5 ஆயிரன் டன் கழிவுகள் உருவாகின்றன. இதனை உரமாக்குவற்கு போதுமான இடமின்றி அரசு திகைத்து நிற்பதே உண்மை நிலை. அரசு கழிவுகளை சுத்திகரிக்க தேவையான பட்ஜெட்டில் நிலையங்களை தொடங்கியே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் உருவாகி வருகிறது.

தகவல்: TOI












பிரபலமான இடுகைகள்