லவ் இன்ஃபினிட்டி: காலம் வழிவிடுமா?
http://t.co/YIlRU8s0mw |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: ரித்திக் சிங்
டயரியில்...
புதிரா புனிதா என்று நீங்கள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் எனக்குப்பிடித்தத்தைத்தான் செய்து வந்தேன். அப்பா சொன்னார், சுப்பா சொன்னார் என்பதெல்லாம் நான் விரும்பவில்லை.
எனக்கு பெண்களை விதிவிலக்கின்றி பிடிக்கும் என்பதை முன்னாடியே சொல்லிவிட்டேன். ஆனால் எந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும் என்பதையும் லேசாக சொல்லிவிட்டேன். கடிதம் எழுதுவது, கடிதம் எழுதிய நோட்டைக் கொடுப்பது என நட்பு ஆண், பெண் இருவரிடமும் வளர்ந்து வந்தது.
25.2.2002
இந்த புள்ளியளவு எனக்கு உன் மனதில் இடமிருந்தால், போதும். Pongal சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருப்பாய். நீ Kavi யை மட்டும் பொங்கலுக்கு கூப்பிட்டாய். ஆனா என்னை கூப்பிடலை. அதனாலென்ன, பரவாயில்லை விடு.
நேரில் உன்னோடு பேசணும். என்னிக்கு அப்படிப் பேச சந்தர்ப்பம் அமையும்? பக்கத்தில் உன்னோடு அமர்ந்துகொண்டு நிறைய சண்டை போடணும். கவிதை, கதை, பூக்கள், பூமி, இந்த வாழ்க்கை, உன் வாழ்க்கை, உன் வீட்டு பருத்திச்செடி, உன் bus, பயணங்கள், உன் சந்தோஷங்கள் பற்றிப் பேசணும். நடக்கணும்னு இருக்கிறது நடந்தே தீரும். நடந்ததெல்லாம் நல்லாவே நடந்தது. இனி நடக்கப்போறது ரொம்ப ரொம்ப நல்லாவே நடக்கும் Ok?
நம் மனசில் காதல் பூக்கும்போது நடக்கிற வேதியியல் மாற்றங்களை எப்படி அளவிடுவது? பரபர உற்சாகமும், அதேவேகத்தில் தொண்டையை உறுத்தும் துக்கமும் எனக்கு புதிதாக இருக்கிறது. சரியா இது தவறா என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனாலும் இந்தப்பாதையில் எனக்கு பயணிக்கப் போகப் பிடித்திருக்கிறது. உன் கண்களின் வெளிச்சத்தில் நான் பயணிப்பேன. தனியாகப் போனால் நீண்டதூரம் செல்லலாம். மகிழ்ச்சியாக நான் உன்னுடன் நிம்மதியாக செல்ல விரும்புகிறேன். காலம் வழிவிடுமா?
(காதல் சொல்லுவேன்)