தேஜா வூ ஏற்படுவது ஏன்?




Image result for deja vu
Youtube




ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி


தேஜா வூ ஏற்படுவது ஏன்?


தேஜா வூ என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்னமே பார்த்த என்று பொருள். நம்பில் பலருக்கும் தேஜா வூ பழகியிருக்கலாம். ஒரு சூழ்நிலையைச் சந்திக்கும்போது, அதனை முன்னமே சந்தித்தது போன்று இருக்கும். அதுதான் தேஜா வூ. 2004 ஆம் ஆண்டு செய்த தேஜாவூ ஆராய்ச்சியில் 50 பேர் பங்கேற்றனர் இதில் மூன்றில் இருபங்கினருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.

பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல; கண்பார்வையற்றவர்களுக்கும் கூட தேஜாவூவை உணர முடிந்திருக்கிறது. கனவுகளைப் போல தேஜா வூவை ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. தேஜா வூ நிகழ்வுகளை உங்களைக் குறித்த நினைவில்லாத நிலையில் பார்க்கிறீர்கள். அதுவும் பின்னர் மறந்துவிடுகிறது. ஆனால் குறிப்பிட்ட முன்னரே பார்த்த நிகழ்வுகள் திரும்ப நடக்கும்போது அவை நினைவுக்கு வருகிறது.

இதில் முக்கியமான ஒற்றுமை, நீங்கள் பார்க்கும் அறைகளில் ஏதோவொரு விஷயம் நீங்கள் பார்த்த அறைகளோடு பொருந்திப்போகும். இதனால்தான் தேஜாவூவில் நீங்கள் பார்த்த  நண்பரின் அறை அவ்வளவு துல்லியமாக உள்ளது. அதேசமயம் நீங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் சில விஷயங்களைப் பார்க்கிறீர்கள் என்றாலும் அதிலும் நீங்கள் பார்த்த விஷயங்களோடு பொருந்திப்போனால் அவை தேஜாவூவை நினைவுபடுத்தும். அல்லது அந்நிகழ்ச்சியாக மாறும்.

தேஜாவூ அதிகமாகத் தோன்றக்காரணம், மூளையின் துரிதமான கொதிப்பான இயக்கம். தொடர்ந்து நியூரான்களுக்கிடையில் மின்தூண்டல்கள் அதிகரித்தால் தொடர்பில்லாத பல்வேறு நினைவுத்தூண்டல்கள் அதிகரிக்கும்.

நன்றி: Thought.co