வலியறியாத பெண்!
kth |
வலியறியாத பெண்!
ஸ்காட்லாந்து பெண், மரபணு மாற்றத்தால் வலியிலிருந்து குணமாகும் தன்மையைப் பெற்றுள்ளதோடு, காயத்திலிருந்தும் விரைவாக குணமடைந்திருக்கிறார். இதன்விளைவாக, வலி காயத்திலிருந்து விரைவாக குணமாகும் சிகிச்சைகளைப் பற்றி ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளனர்.
ஜோ கேமரூன் என்ற 66 வயது பெண்மணி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையும் அவருக்குத் தேவைப்பட்டது. இதற்கான சிகிச்சைகள் கடுமையான வலிதரும் என்பதால் கேமரூன் பயத்துடன் இருந்தார்.
சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவரது உடல்நிலை, வலி குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர். மணிக்கட்டு உடைந்தபோதும், காயங்களிலும் வலி இல்லாததை உணர்ந்தார். கேமரூன், ஆக்ஸ்ஃபோர்டு மரபணு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டார். அப்போது அவருக்கு மரபணு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் FAAH எனும் மரபணு வலியற்று இருப்பதற்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டது. இதில் அதே பெயரிலான என்சைமும் உதவுகிறது.
அதேசமயம் இந்த மரபணு அமைதியாக்கப்படுவதால், காயம் வேகமாக குணமாகிறது. அதோடு வலி, காயம் தொடர்பான பய நினைவுகளும் அழிகின்றன. மனதில் ஏற்படும் பதற்றம், பயம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஜோ கேமரூனைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அதேசமயம் இவரின் குடும்பத்திற்கு இதுபோல மரபணுரீதியான தன்மை கிடையாது.
நன்றி: அனஸ்தீசியா இதழ்