பெண்களை உயர்த்தும் கட்சிகள் எவை?
indianexpress |
பணிகளைச் செய்வதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். தேர்தலில் கட்சிகள் பெண்களை உயர்த்துவது பற்றி வாய்கிழிய பேசினாலும், செயல்பாடு என வரும்போது அந்த வாக்குறுதியை மிக கவனமாக மறந்துவிடுவார்கள். 33 சதவீத இட ஒதுக்கீடும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அதெல்லாம் விடுங்கள். விரைவில் தேர்தல் வரப்போகிறது அதில் பெண்களுக்கான இடம் உண்டா?
இதில் முதலிடத்தில் நிற்பது மேற்கு வங்கத்தின் தீதிதான். மம்தா பானர்ஜி, தன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் சீட்டில் 40 சதவீதத்தை பெண்களுக்காக அளித்துவிட்டார். அடுத்து ஒடிசாவின் பிஜூ பட்நாயக். தேர்தலில் மத்திய அரசு அளிக்கத்தவறிய 33 சதவீத இடங்களை பெண்களுக்கு அளித்து கௌரவம் சேர்த்திருக்கிறார்.
பெண்களுக்கு இடமில்லை!
7 தேசியக்கட்சிகள், 51 மாநிலக்கட்சிகள் உள்ள நாட்டில் பெண்களுக்கு இது எப்படி போதுமானதாக அமையும் சொல்லுங்கள்? இது குறித்த சர்வே ஒன்றை செய்தபோது 1996 - 2014 வரையிலான தேர்தல்களில் பெண்களுக்கான இடங்கள் பத்து சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. உள்ளூர் தேர்தல்களில் மட்டும் விதிவிலக்காக பத்து சதவீதத்தை பெண்கள் தாண்டியுள்ளனர்.
இதில் காங்கிரஸ் பெருமளவு பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து சீட்டுகளை அதிகம் வழங்கியுள்ளது. இருப்பதிலேயே பெண்களுக்கு குறைவான சீட்டுகளை வழங்கிய கட்சி, பகுஜன் சமாஜ்தான். மேற்சொன்ன காலகட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 174. இதில் 726 பேர் மட்டுமே பெண்கள். மொத்தம் 8% சதவீதம். ஆறு மக்களவைத் தேர்தல்களில் அதிகளவு பெண்களை போட்டியிட உதவிய மாநிலம் மேற்கு வங்கமாகவும், மிக குறைந்த பெண்களை அனுமதித்த மாநிலமாக கேரளா, டெல்லி ஆகியவை உள்ளன.
வெற்றிவாய்ப்பு குறைவு
மேற்கு வங்கம் எப்படி அதிகளவு சட்டமன்ற உறுப்பினர்களாக பெண்கள் உள்ளனரோ, அதேபோல குறைவான அளவில் பெண்கள் வெல்லும் மாநிலமாக கர்நாடகம் மாறியுள்ளது. மேற்குவங்கத்தில் நூறில் இருபது பேர் வெல்கிறார்கள் என்றால், கர்நாடகத்தில் வெறும் ஐந்துபேர் மட்டுமே வெல்கிறார்கள். ஆறு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 736 எனில் இதில் வென்றவர்களின் எண்ணிக்கை 298 மட்டுமே. மொத்தம் 11 சதவீதம்.
”தேர்தலில் போட்டியிட பெண்கள் குறைவாக இருப்பதன் காரணம், சமூகத்திலேயே உள்ளது. கட்சிகள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து சீட்டுகளைத் தர முன்வரவேண்டும். தேர்தலிலும் பெண்கள் ஆண்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.” என்கிறார் நாடாளுமன்ற எம்பி கனிமொழி.
காங்கிரஸ் பத்தில் ஒருவர் என்ற கணக்கில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கிறது. பகுஜன் கட்சி வெறும் 5 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு வாய்ப்பளிக்கிறது. பாஜக 8%, இடதுசாரி 9% என பெண்களுக்கு வாய்ப்பளிக்கின்றனர். இத்தேர்தலில் காங்கிரஸ் 286 பெண்களுக்கும், பாஜக 96 பெண்களுக்கும் சீட்டுகளை ஒதுக்கியுள்ளன.
தேர்தல் அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் 13 சதவீத பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. ஆனால் பாஜக, பகுஜன் கட்சிகள் இன்னும் பத்து சதவீதத்தை தாண்டவில்லை.
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா