LGBTயினரை ஆதரிக்கும் போஸ்ட்வானா!

theconversation.com

ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் போஸ்ட்வானா!

அண்மையில் போஸ்ட்வானா நாட்டு உயர் நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக்கும் சட்டத்தை அகற்றியுள்ளது. இந்த தீர்ப்பு வரும் ஜூன் முதல் அமலுக்கு வரவிருக்கிறது. கென்யாவில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் மே மாதம் வெளியிடப்பட விருக்கிறது. 

காலனிய ஆட்சிகாலச் சட்டப்படி, ஓரினச்சேர்க்கையாளர்களின் உறவு, சட்டம் 164 படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க முடியும். இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகள் பிரிவில் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்க முடியும். 

போஸ்ட்வானாவின் சட்டங்கள் அப்படியே இந்தியச்சட்டங்களைப் போன்றதே. 1830 ஆம் ஆண்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்திய சட்ட கமிஷன் மூலம் ஓரினச்சேர்க்கை சட்டத்தை இயற்றினார். இந்தியா மற்றும் போஸ்ட்வானா சட்டங்கள் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியின்(1533) சட்டத்தைப் பின்பற்றி இயற்றப்பட்டது. 1960 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போஸ்ட்வானா, 2003 ஆம் ஆண்டுதான் சட்டங்களை நவீனப்படுத்த தொடங்கியது. 

பிரிட்டிஷின் காலனி நாடுகளாக இருந்த பல்வேறு நாடுகளில் இன்றும் ஓரினச்சேர்க்கை என்பது கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. தற்போது எழுபது நாடுகளில் இன்றும் அவை குற்றச்சட்டங்களாக கருதப்படுகின்றன. 

2016 ஆம் ஆண்டு எம்மெகி என்ற போஸ்ட்வானா தினசரி நாளிதழ், 43 சதவீத மக்கள் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக இல்லை என்று சர்வே எடுத்து நிரூபித்தது. இதன்மூலம், ஆப்பிரிக்க நாடுகளில் சகிப்புத்தன்மை கொண்ட நாடாக போஸ்ட்வானா மாறியுள்ளது. போஸ்ட்வானா சமூகத்தில் கிடைத்துள்ள கல்வி அங்குள்ள சட்டங்களையும் மாற்றியுள்ளது. வரவேற்கத்தக்கது. 

நன்றி: theconversation.com