இளைஞர்களின் குரல் 2
better india |
செல்லக்குழந்தைகளுக்காக பொம்மைகள் வங்கி தொடங்கினேன்
ஆர்யமான் லோகோட்டியா(17, கொல்கத்தா)
என்னுடைய பதினாறு வயது சகோதரி மூலமாகவே பொம்மை வங்கி தொடங்குவதற்கான ஐடியாவைப் பெற்றேன். இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளாலும் பொம்மைகளை வாங்கி விளையாட முடியாது. பொருளாதார நிலைதான் இதற்கு காரணம். இதற்காகவே பொம்மைகளை தானம் பெற்று குழந்தைகளுக்கு வழங்க முயற்சித்தோம்.
Betterindia |
முதலில் பொம்மைகளை பெறுவதற்கான மையம் ஒன்றை அமைக்க சிரமப்பட்டோம். ஆனால் இன்று, இந்தியாவில் ஏழு நகரங்களில் எங்களுக்கு மையங்கள் உண்டு. உள்ளூர் என்ஜிஓக்கள் மற்றும் பல்வேறு குழந்தைகள் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு பணியாற்றி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக 1,500 பொம்மைகளை தானம் பெற்று வழங்கியுள்ளோம்.
இதில் எங்களுடைய வயதும் முக்கியக் காரணமாக செயலாற்றியுள்ளது. காரணம், இப்பணியில் எங்களுடைய லாபம் என்று ஒன்றும் கிடையாது. எனவே வயது சிறியதோ நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
குழந்தைகள் செயற்பாட்டாளர்
சம்பா குமாரி (14, ஜார்க்கண்ட்)
TOI |
இதற்கு என் தந்தை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் என் சகோதரர்கள் அவரை சமரசப்படுத்தி என்னை படிக்க வைத்தனர். இன்று என்னுடைய ஜம்தார் கிராமத்தில் பால் பஞ்சாயத்திற்கு நான் தலைவராக இருக்கிறேன்.
குழந்தை திருமணங்களுக்கு எதிராக எங்கள் ஊரில் செயல்படுகிறேன். இதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள், மிரட்டல்கள் என் தந்தையிடம் வரும். என்னுடைய பெயர் நாளிதழ்களிலும், டிவிக்களிலும் வருவதால் இச்செயல்பாடுகள் பற்றி பலரும் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த அங்கீகாரம் உங்கள் மகளுக்கும் கிடைக்கும் என்று கூறித்தான் அவர்களை படிக்க வைக்க பிரசாரம் செய்து வருகிறேன்.
stuMagz |
நாய்களுக்கு காப்பகம்
ஸபி கான், (21,ஹைதரபாத்)
நான் என்னுடைய பதிமூன்று வயதிலிருந்தே செல்லப்பிராணிகளுக்கான செயல்படத்தொடங்கிவிட்டேன் எனும் ஸபிகான், தன் பதினாறு வயதில் நாய்களுக்கான காப்பகம் தொடங்கிய விலங்கு நேசர்.
நாய்கள் காப்பகத்திற்கான நிலத்தை நான் வாடகைக்கு எடுத்தேன். இதற்கு உதவியது பெற்றோர் எனக்கு கொடுத்த பாக்கெட் மணிதான். எ பிளேஸ் டு பார்க் என்ற தன்னார்வ நிறுவனத்தை எனது பதினெட்டு வயதில் தொடங்கினேன். ஆனால் நான் எனது கல்லூரிக்கு படிக்கச்சென்றபிறகு காப்பகத்திலுள்ள ஆதரவற்ற நாய்களை சரியாக பராமரிக்க முடியவில்லை. எனவே கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அக்காப்பகத்தை அருகிலேயே அமைத்தேன்.
milaap.org |
முதலில் விநோதமான பார்த்தாலும், என் ஈடுபாட்டைப் பார்த்து ஆதரவளித்துவிட்டனர். நான் வளர்ப்பு பிராணிகளை கொடுமைப்படுத்துபவர்களைப் பற்றி காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்துள்ளேன். ஆனால் நான் புகார் கொடுத்ததை போலீசார் நம்பவே மாட்டார்கள். காரணம் என் வயது. என் நண்பர்களும், ஏய் அங்கே ஒரு நாய் நிற்கிறது, ஓடிப்போய் காப்பாற்று என கிண்டல் செய்வார்கள்.
நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இந்த உலகிற்கு வந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உண்டு. நான் தினசரி காலை 4 மணிக்கு எழுந்து ஆதரவற்ற விலங்குகளை தேடத் தொடங்கிவிடுவேன். அவைகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் என் இதயம் தன்னை அறியாமல் துடிக்கத் தொடங்கிவிடுகிறது என நெகிழ்ச்சியாக பேசுகிறார்
நன்றி: TOI