தேர்தலின் கதை!



Image result for 1951-52 election
Wishesh





தேர்தலின் கதை!


1951 - 52

காங்கிரசின் காலம். இடதுசாரி, சோசலிச கட்சிகள் இணைந்து  போட்டியிட்டன.  சோசலிச கட்சியை முன்னிலைப்படுத்திய தேவ் ஆச்சார்ய நரேந்திர தேவ், பனிரெண்டு சீட்டுகளை வென்றார். கிசான் மஸ்தூர் பிரஜா பார்ட்டியின் கிருபாளினி 9 சீட்டுகளை வென்றார். தேர்தலில் ஜனதா கட்சியின் சியாம பிரசாத் முகர்ஜி 3 சீட்டுகளை வென்றார்.

1957

இம்முறையும் கைக்கட்சியே வென்றது. பிளவுபடாத இடதுசாரி கட்சி 33 சீட்டுகளை வென்றது. ஜனதா கட்சி முன்னர் பெற்றதை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்றாலும் மைனர் கட்சியாகவே இருந்தது. அம்பேத்கரின் அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு(SCF) தேர்தலில் ஆறு சீட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு.

1962 

இந்தியாவின் மூன்றாவது தேர்தலில் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின. ராம் மனோகர் லோகியா, பிஎஸ்பி கட்சியை விட்டு விலகி சோசலிச கட்சி சார்பில் நின்றார். சுதந்திர வணிகம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு காங்கிரஸ் கட்சியினர் சிலர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியை ஆதரித்தனர்.

1967

நேரு இறந்தபின் நடந்த தேர்தல். காங்கிரஸ் இக்காலத்தில் செல்வாக்கில் பெரும் சரிவைச் சந்தித்திருந்தது. மூன்றில் இருபங்கு வாக்கு சதவீதத்தை இழந்திருந்தது.  சுதந்திரா கட்சியும் ஜனசங்கமும் 79 சீட்டுகளை வென்றன. இடது மற்றும் சோசலிசக் கட்சிகள் 83 இடங்களை வென்றன. திமுக மற்றும அகாலி கட்சிகள் 29 சீட்டுகளை வென்றன. பிஎஸ்பி கட்சியை உடைத்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியைத் தொடங்கினர்.

1971

இந்திரா சந்தித்த மக்களவைத் தேர்தல் வெற்றி இது. 1969 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் எம்பிகள் அவருக்கு ஆதரவாக நின்றனர். கரீபி கட்டாவோ சுலோகன் இந்திராவை இந்தியாவின் மகளாக மாற்றியது. சுதந்திரா கட்சிக்கு எட்டு சீட்டுகள் கிடைத்தன.

1977

எமர்ஜென்சிக்குப் பிறகான காலகட்டம் காங்கிரசுக்கு பெரும் சோதனைக்காலம். இந்திராகாந்தி விதைத்ததை காங்கிரஸ் அறுவடை செய்தது. இடதுசாரி மற்றும் சோசலிஸ்டுகள் ஒன்றாக இணைந்தனர். சரண் சிங்கின், பாரதிய லோக் தள் கட்சியில் அனைவரும் ஒன்றாக இணைந்தனர். மொரார்ஜி தேசாய், காங்கிரஸ் கட்சியல்லாத ஒருவராக முதல் பிரதமராகிறார். குறைந்த காலம்தான் என்றாலும் இது ஒரு சாதனை.

1980

ஜனதா கட்சி, சோசலிச கட்சிகள் ஆகியவை ஒன்றுக்கொன்று கருத்தியல்ரீதியாக முரணானவை. 1979 ஆம் ஆண்டு சரண்சிங், ராஜ் நாராயண், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் ஜனதா கட்சியில் இருந்த ஆர்எஸ்எஸ் தொடர்பை அறுத்தெறிய முயற்சித்தனர். அதோடு கட்சியும் ஆட்சியும் கலைந்தது. இதற்காகவே காத்திருந்த இந்திரா தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார்.


1984

இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின் நடந்த தேர்தல். அனுதாப அலைகள் வாக்குகளாக மாற, காங்கிரஸ் 400 க்கும் மேற்பட்ட சீட்டுகளை வென்றது. மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தை  வென்றது. ஜன சங்கத்தின் கட்சியான பிஜேபி வென்றது எத்தனை சீட்டுகள் தெரியுமா? நம்புங்கள் இரண்டே இரண்டு சீட்டுகள்தான்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா