கிராக் பார்ட்டி: நெகிழ வைக்கும் கல்லூரி வாழ்க்கை
ABZMovies.Com |
கிராக் பார்ட்டி
இயக்கம்: சரண் கோபிசெட்டி
கதை: ரக்சித் ஷெட்டி
வசனம்: சந்து மாண்டெட்டி
ஒளிப்பதிவு: அத்வைதா குருமூர்த்தி
இசை:அஜனீஸ் லோக்நாத்
Sify.com |
ஜாலியான கல்லூரிக் கதை. ஆனால் வெட்டியாக ஆசிரியர்களை முட்டாளாக காண்பிக்கும் 1980 கால தமிழ் சினிமா கல்லூரி அல்ல என்பதுதான் கொஞ்சம் ஆசுவாசமாக உள்ளது.
கல்லூரியில் முதல் ஆண்டு மாணவராக சேரும் கிருஷ்ணாவுக்கு(நிகில் சித்தார்த்) டிஸ்டிக்சன் வாங்கி ஆளுநர் கையில் அவார்ட் வாங்கும் ஐடியாவெல்லாம் கிடையாது. ஜாலியாக சரக்கு அடிக்கிறார், நண்பர்களை கிண்டல் செய்யும் சீனியர்களை குழுவாக சேர்ந்து அடி வெளுக்கிறார். கல்லூரி மாணவிகளை அவர்களே பீதியாகும்படி லவ் பண்ண முயற்சிக்கிறார்.
iQlik Movies |
அப்போதுதான் மீரா எனும் சீனியர் மாணவி(சிம்ரன் பரீஞ்சா) அறிமுகமாகிறார். நிகிலின் மொத்த நண்பர் குழுவே அம்மணிக்கு பிராக்கெட் போட முயற்சிக்கிறது. ஆனால் அம்மணியை ட்ராப் செய்ய கார் வாங்க திட்டம் போட்டு அவரின் இதயத்தை வெல்கிறார் நிகில். அதிலும் மீராவின் இந்தி கிளாசுக்கு வந்து கலாட்டா செய்யும் காட்சி ஆசம்.
நெகிழ்ச்சி இல்லாமலா? மீராவின் செக்ஸ் தொழிலாளி ஒருவருக்கு உதவப்போக, அச்சந்திப்பு கிருஷ்ணா மீதான எண்ணத்தை மீராவுக்குள் படரவிடுகிறது. அப்புறம் என்ன காதல்தான். அடடா அரரரே என விஜய்பிரகாஷ் ஆசிர்வாத குரலால் நம் மனசுக்குள்ளும் பாடத்தொடங்கிவிடுகிறார். அப்போது நடக்கும் துரதிர்ஷ்ட சம்பவம் கிருஷ்ணாவின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாற்றுகிறது.
Cinema Express |
கல்லூரி வாழ்க்கையில் சந்திக்கும் நட்பு, காதல், சோகம், காதல் பிரிவு, பயணம், தன்னைத் தானே கண்டுபிடிப்பது, பிறரது வாழ்க்கையையும் மலர வைப்பது என கிராக் பார்ட்டி பின்னி எடுக்கிறது. சும்மா சொல்லவில்லை. கார்த்திகேயா தொடங்கி இந்த படம் வரை நிகில் படம் பார்க்க வருபவர்களை ஏமாற்றவில்லை. பிரமாதமாக நடித்திருக்கிறார். காமெடி, நெகிழ்ச்சி, திமிர், அன்பு என அத்தனையையும் பிரதிபலிப்பது நல்ல நடிகன் உருவாகி வருகிறான் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது.
சிம்ரன் பரீஞ்சா கொஞ்ச நேரம்தான் வந்தாலும் தந்தையின் கண்டிப்பை சிரித்துக்கொண்டே சொல்வதும், நிகிலின் காதல் குறும்பை மென்சிரிப்புடன் ரசித்து சிரிப்பதும் காதல் பலூன்களை மனதில் மட்டுமல்ல கண்களிலும் ஹாயாக ஊதுகிறார். இரண்டாம் பாகத்தில் வரும் சம்யுக்தா ஹெக்டே, கண்ணிலே காதல் சொல்லி நிகிலை இறுதியில் மடக்கும் எபிசோடுகளும் உங்களை காதல் ஜூரத்தில் தள்ளும்.
படத்தின் காமெடி இறுதிவரை தொடர்வது அருமை. நிகில் நெகிழ்ச்சியுடன் எழுதும் கடிதம் மாறி பிரின்சிபாலிடம் சிக்குவது சூப்பர் காமெடி ட்விஸ்ட்.
தெலுங்குபடம் என்றாலே பன்ச் லைன்கள், காமெடி ஆக்சன் என ஸ்டீரியோ டைப்பாக பேசுபவர்கள் கிராக் பார்ட்டியை நிச்சயம் பார்த்தால் மனம் மாறுவது உறுதி.
-கோமாளிமேடை டீம்