லவ் இன்ஃபினிட்டி: ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு டேஸ்ட்!



Autumn Rager



லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: லக்கிலுக், கம்மவார் பாலாஜி


2002 ஆவது வருஷம்  மறக்க முடியாத பல விஷயங்கள் நடந்தது.அதில் முக்கியமானது, ரஞ்சனி அக்காவைச் சந்திச்சது. இவங்களுக்கு கணவர் கிடையாது. பெண் குழந்தை மட்டும்தான். கவி மூலமாக கிடைச்ச நட்பு இது.

எங்கே நட்பு எனும் ட்ரெயினில் ஏறினோம்னா? நான் கவிதைன்னு ஈரோடு, அரச்சலூர், சிவகிரின்னு திரிஞ்சப்பவே வேதாத்ரி மகரிஷி எங்க ஊர்ல செம ஃபேமஸ். உடனே அவரோட கிளாஸ்ல சேருன்னு கவி பணம் கூட கொடுத்தா. சரி, என்னடா இதுன்னு கிளாஸ்ல சேர்ந்தேன். வித்தியாசமாக இருந்தது. அங்க சொன்ன பல விஷயங்களை பின்னாடி ஸ்டீபன் ஹாக்கிங் புக்ல படிப்பேன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை.

நான் காலேஜ் போனபோது, தாமரைப்பாளையத்துல வேதாத்திரி வகுப்புல சேர்ந்தேன். அங்கேயும் காதல் என்னை சும்மா விடலை. சுமதின்னு ஒரு பிளஸ்டூ படிக்கிற பொண்ணு வந்துக்கிட்டிருந்தது. ஊராளிக்கவுண்டர் வீட்டு புள்ள. வாளிப்புக்கு கேட்கணுமா. இந்த தடையெல்லாம் தாண்டித்தான் கற்கண்டு இனிப்பை நெத்தியில் தக்க வைக்க முயற்சி பண்ணினேன்.

முதலில் கண்களுக்குள் 89 வீடியோக்கள் ஓடி, சவீதா பீவி அன்போட அழைச்சாங்க. அவங்களுக்கு அப்புறம் உங்கள பார்க்கிறேன்னு சமாதானம் சொல்லி அனுப்பிட்டு தியானம் முதற்கொண்டு காயகல்பம் வரை போனேன். ஆனா சுமதி, சீக்கிரமே என்னை அவளோட பெட்ரூம் வரை கூட்டிப்போக பார்த்தா. அவங்க அப்பாவோட எக்சர்ஸைஸ் செய்யாத சிக்ஸ்பேக் உடம்பை பார்த்ததிலிருந்தே சுமதியை தங்கச்சியாக பிக்ஸ் ஆகி செட் ஆகிட்டேன்.

முதல்ல பாசநேசமா பேசி சுமதிகிட்ட நெருங்கினேன். அப்ப அவங்கப்பாவ நான் நேர்ல பார்க்கல. பார்த்தப்புறம் எண்சாண் உடம்பு நடுக்கத்த மறைக்க முடியல. தியானம் முடிச்சப்புறம் எங்கூட பேசறக்கு ஒருநாள் குரோட்டன்ஸ் பக்கம் நின்னுக்கிட்டிருந்தா.  ஏன் இப்போல்லாம் எங்கூட பேச மாட்டீங்கறா

தினசரி தியானம் செய்துவிட்டு பால் சொசைட்டியில் பால் வாங்கிட்டுப் போவது எனது குடும்பக்கடமை. சொல்ல மறந்துவிட்டனே. சுமதியின் வீடும் போகிற வழிங்கிறதால கூடவே பேசிக்கிட்டு வருவா. எல்லாமே தி.ஜானகிராமன் கதையில் வர்ற பெண்கள் கேட்கிற கேள்வி. முடியுமா, உனக்கு வீட்டுல யாரு இஷ்டம்,  பொண்ணுங்க எத்தனைப் பேரு ஃப்ரெண்டுனு இடையறாத கேள்வி.

முதல்லேயே சொன்னேன் இல்லியா? எனக்கு விதிவிலக்கே கிடையாது.  பொண்ணுங்கன்னாவே எனக்குப் பிடிக்கும். அவங்கள எப்படி யோசிப்பாங்க, என்ன கேள்வி கேட்பாங்க, அதுக்கு என்ன பதில் சொன்னா எப்படி அடுத்த கேள்வி வரும், நாம் எதிர்பார்க்கிற பதிலை எப்படி கொண்டு வர்றதுன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்ட போவேன்.

நெல்லிக்காய், இலந்தைப்பழம், கச்சாயம், போண்டா,வடைன்னு சுமதி தனக்கு எது கிடைச்சாலும் எனக்கு கொண்டு வந்து குடுப்பா. என்ன பிரியமோ... என்னால அதை எப்படின்னு வகைப்படுத்த முடியல. கிளாசில் சேரும்போது, வேண்டாத விருந்தாளியைப் பார்க்கிற மாதிரி பார்த்தா. அப்புறம் ஒரு மாசத்துல நான் சைக்கிளைத் தள்ளிக்கிட்டே வர முன்னாடி பேசிக்கிட்ட போவா. கேள்வி கேட்டு பதில் வரலீன்னா சட்டுன்னு திரும்பி பின்னாடி பார்ப்பா.

நான் அப்போ மோகனா, மைதிலி, ரூபான்னு எந்த மோடில இருந்தாலும் ஸ்டேண்டர்டு மோடுக்கு வந்து சுமதியைப் பார்த்து சிரிப்பேன். மாநிறத்தில் கூர்மையான முகம். சிரிச்சா மட்டும் தெய்வீகம், முறைச்சா காளி தேவி மாதிரி. ஒருமுறை காலேஜ் ஃப்ரெண்டு(பொண்ணேதான்), அருணாவைப் பார்த்து குமார் ஜெராக்ஸ் கடையில் நின்று தம் அடிச்சுக்கிட்டே பேசிக்கிட்டிருந்தேன். அன்னைக்கு கேட்டா பாருங்க கேள்வி. ஆதார் கார்டுக்கு ஐடியாவை மோடிக்கு குடுத்தது இவதான். அத்தனை கேள்வி.

(காதல் சொல்லுவேன்)