”நடிப்பை அனுபவித்து நடிக்கிறேன்”
The Week |
புலவாமா தாக்குதல், உரி படத்தினை மேலும் பேச வைத்திருக்கிறது. ஹவ் இஸ் ஜோஸ் என்ற வசனத்தை பேசி சில மாணவர்கள் போலீசிலும் கைதாகி உள்ளனர். அந்தளவு படம், பலரையும் சென்றடைந்திருக்கிறது. சரியான டைமிங் என்பதோடு விக்கி கௌசலின் அபார நடிப்பும் முக்கியக் காரணம்.
மாசான் டூ உரி பயணத்தை சொல்லுங்கள்?
என்மேல் நம்பிக்கை வைத்து இயக்குநர்களால் இப்பயணம் சாத்தியமானது. நான் நடிகனாக திட்டமிட்டு திரைத்துறைக்கு வரவில்லை. 2015 ஆம் ஆண்டு மாசான் படம் வெளியானபோது அடுத்தடுத்த ஆண்டுகளில் என்ன படம் செய்வீர்கள்? என்று கேட்டால் திகைத்து போயிருப்பேன். அந்தளவு திட்டமிட்டு எதையும் செய்யவில்லை அவ்வளவுதான்.
இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் உரி என்று உங்கள் படம்தான்....
2018 ஆம் ஆண்டு எனக்கு மகிழ்ச்சி கொடுத்த ஆண்டு. உரி படம் நன்றாக ஓடியது எனக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. என்னை விமர்சிப்பவர்கள், ரசிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் உதவியின்றி இந்த வெற்றி சாத்தியமில்லை என்பதே உண்மை.
உரிக்கு எப்படி தயாரானீர்கள்?
கடின உழைப்பு இதற்கு தேவைப்பட்டது. ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு மேலாக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் உழைத்தோம். பதினைந்து கிலோ எடை ஏற்றி ராணுவ அதிகாரியுடன் கேரக்டரை மேம்படுத்தி உழைத்தேன். தினசரி 16 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தது.
உங்களுக்கு கிடைத்துள்ள புகழை எப்படி உணர்கிறீர்கள்?
நான் புகழ்பெற்றவன் என்பதை எப்படி புரிந்துகொள்வது? நான் என் குடும்பம் மற்றும் நண்பர்கள் புடைசூழ வாழ்பவன். வெற்றி, தோல்வி, புகழ் என்பதை என் தலையில் ஏற்றுக்கொள்பவனல்ல. நடிப்பு என்பதை அனுபவித்து நடித்தால் போதும்
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்டல்ஜ். (சர்மிஸ்தா கோசல்)