சமூக வலைத்தளங்கள் வலதுசாரித்துவத்தை ஊக்குவிக்கின்றன


Image result for karin pettersson
Resume


சமூக வலைத்தளங்கள் செய்திகளை உணர்ச்சிகரமாக்குகின்றன


ஸ்வீடன் பத்திரிகையாளர் கரின் பீட்டர்சன்


தமிழில்: ச.அன்பரசு


இன்று மக்கள் தமது செய்திகளை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலிருந்து பெறுகிறார்கள். அதில் தவறான செய்திகள் நிறைய புழங்குகின்றன. ஊடகங்களுக்கு சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்கான முக்கிய ஆதாரமாக மாறியுள்ள நிலையில் இந்த போலிச்செய்திகள், வதந்திகளை எப்படி சரி செய்வது?


தொடக்கத்தில் ஊடக நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களை கண்டுகொள்ளாமல் அமைதி காத்தன. காரணம், இதில் வெளியிடப்படும் செய்திகள் மற்று பிற விஷயங்களின் தாக்கம், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதில் தடுமாற்றம் இருந்தன. மக்களுக்கு செய்திகளை சரியான முறையில் வழங்குவதற்காக இன்று ஃபேஸ்புக்குடன் பல்வேறு செய்தி நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. 

இதன் அடிப்படையில் சந்தா கட்டி படிக்கும்படியான திட்டங்களும், நன்கொடை பெற்று செய்திகளை வழங்குவதும் இன்றைய டிரெண்டிங்காக உள்ளது. 


சமூக வலைத்தளத்திற்கு நீங்கள் தெரிவிக்கும் ஆதரவு என்பது கருத்தியல் சார்ந்ததா?


சமூக வலைத்தளத்தில் வலதுசாரித்துவத்தின் வேகத்தை எளிதாக நீங்கள் கண்டுணர முடியும். இதுகுறித்து நான் எழுதிய நூலில் தி இன்டர்நெட் இஸ் ப்ரோக்கன்: சிலிக்கன் வேலி அண்ட் தி கிரிசிஸ் ஆஃப் டெமோகிரசி குறிப்பிட்டுள்ளேன். 

வலதுசாரி வாதங்களை சமூக வலைத்தளங்களை விட வேறு யாரும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. வலதுசாரிகளுக்கு தம் கருத்துக்களை விட பயத்தை மக்களுக்கு ஊட்டவேண்டும் என்கிற வெறி அதிகம். குறிப்பாக, அவர்களின் அரசியல் திட்டத்தின் முக்கியப்பகுதி அதுவே. இந்த சமூகவலைத்தளங்கள் இடதுசாரி தீவிரவாதத்திற்கும் இடம் கொடுப்பவைதான். காரணம், இவை குறிப்பிட்ட செயல்திட்டப்படி உருவாக்கப்படவில்லை என்பதுதான். 







Related image








சமூக வலைத்தளங்களிலுள்ள பிரச்னை என்ன?

ஒவ்வொரு சமூக வலைத்தளங்களும் தொடங்கப்பட்டவற்றின் நோக்கம் வேறுவேறு. இதிலுள்ள பயனர்களின் அடிப்படையில்  இதன் பாதிப்புகள் மாறுபடும். ஃபேஸ்புக் மற்றும் யூட்யூப் ஆகிய வலைத்தளங்கள் அபாயகரமானவை. ஏனெனில் இதில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை அதிகம். 

ட்விட்டரும் அதன் வழிமுறையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமான செய்திகளை அரசியல் பிரபலங்கள் இதில்தான் அறிவிக்கிறார்கள். வேறு வேறு நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் செய்திகளை தீவிரமான பகுத்தறியாத ஒரே தன்மை கொண்டதாக உணர்ச்சிகரமாக மாற்றுவதுதான் ஆபத்தை விளைவிக்கிறது. இது ஜனநாயகத்தை சிதைத்து ஒழித்துவிடும் அபாயம் உள்ளது. 


சமூக வலைத்தளங்கள் இதற்காகவே அல்காரிதங்களை தயாரிக்கிறார்கள் என்று கூறலாமா?

குறிப்பிட்ட கருத்துக்களை பிரபலப்படுத்துவதற்காக தங்கள் அல்காரிதங்களை டெக் நிறுவனங்கள் மாற்றுகிறார்களா என்று உறுதியாக கூறமுடியாது. 

சிலசமயங்களில் தங்கள் அல்காரிதம்களை அப்டேட் செய்துவிட்டு, அதைப்பற்றி சிறியளவு தகவல்களை மட்டும் கூறுவார்கள். இதன் தாக்கத்தைப் பற்றி ஆராய்ச்சிகள் அதிகளவு செய்யப்படவில்லை. ஆனால் கருப்பு பெட்டியில் உள்ளதுபோல அல்காரித ரகசியங்கள் உள்ளது ஆபத்தானதே. 


ஜனநாயகத்திற்கு இணையம் ஆபத்தாக உருமாறுமா?


இதற்கு காரணம் இணையம் அல்ல. அதிலுள்ள டெக் நிறுவனங்கள் வணிகத்திற்கான கொண்டுள்ள மாதிரிதான் பிரச்னை. பயனர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நிறுவனங்களிடம் விற்க முயலும் முயற்சிகள்தான் ஆபத்தை தருகின்றன. ஒரு தளத்தை மக்கள் பார்க்க, அதில் உணர்ச்சிகரமான விஷயங்களை சேர்க்கிறார்கள். எனவேதான், அத்தளம் மக்களால் கவனிக்கப்பட்டு விவாதத்திற்குரியதாக மாறுகிறது. நிறுவனங்கள் விரும்புவதும் அதுவேதான்.  


இணையத்தை வலிமையானதாக பாதுகாப்பானதாக எப்படி மாற்றுவது?

அது மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் வலியுறுத்தல் , விவாதங்களில்தான் இருக்கிறது. உதாரணமாக, புகையிலை தொழிற்சாலையை எடுத்துக்கொள்ளுங்கள். சிகரெட், புகையிலை என வெகுகாலம் பரவி புகழ்பெற்றபோதும், மக்கள் இதன் ஆபத்தை உணரவில்லை. ஆனால் இதனைப் பயன்படுத்திய பயனர்கள் மெல்ல பொதுவெளியில் இதுகுறித்து பேசியபோது, அனைவரும் புகையிலையின் ஆபத்தை உணர்ந்தனர். இன்று பல்வேறு ஆராய்ச்சிகள், அதன் முடிவுகள் வழியாக புகையிலையைப் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

நான் இன்று தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும் அதன் தொடக்க கட்டத்தில் நிற்கிறோம். தற்போது தகவல் பாதுகாப்பு என்ற நிலையில் உறுதியாக இருக்கிறோம். இப்போதும் கூட நாம் அவசரப்பட வேண்டியதில்லை. மக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் சமூக வலைத்தளங்களின் பாதிப்பு குறித்து விவாதித்து முடிவுக்கு வரலாம். 

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா