ஹெட்ஜ் நிதியில் லாபம்!
வணிகத்தில் லாபம் பார்ப்பதற்கான முக்கிய வழி, ஹெட்ஸ் நிதிகளில் இணைவதுதான். இந்த முதலீடு, பல்கிப் பெருகி நம் வங்கிக்கணக்கை அடைவது நாட்டின் தொழில்வளர்ச்சியைப் பொறுத்துள்ளதே.
ஹெட்ஜ் நிதி என்பது வெளிநாட்டு முதலீடு. கடல்கடந்து இன்று நீங்கள் அமெரிக்காவில் ஏன் இங்கிலாந்தில் கூட முதலீடு செய்யலாம். இணையம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும். நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு ஆன்லைன் வணிகத்தில் நீங்கள் ஈடுபடலாம். உலகிலுள்ள பணக்காரர்கள் இவ்வகையில் வளரும் தொழில்துறையில் முதலீடு செய்கின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு இந்த ஹெட்ஜ் நிதி அவசியம்.
கடந்த ஆண்டில் மட்டும் இவ்வகையில் கிடைத்த முதலீட்டு நிதி 88 பில்லியன் டாலர்கள். நாட்டின் தொழில்வளர்ச்சி சரியான திசையில் சென்றால்தான் முதலீட்டு நிதி கிடைக்கும். அரசியல் தடுமாற்றங்கள், தொழில்துறை சரிவு, போராட்டங்கள் நாடு திகைத்து நின்றால் மெல்ல ஹெட்ஜ் நிதி சரிவைச் சந்திக்கும். கடந்த ஆண்டின் செப்டம்பரில் 955 பில்லியன் டாலர்கள் முதலீட்டு நிதி கிடைத்தது. ப்ளூம்பர்க் அறிக்கைப்படி இது சாதனையான தொகைதான். சிக்கல்களைச் சந்தித்தாலும் இன்றும் ஹெட்ஜ் நிதிகளில் பணம் குவிவது நிற்கவில்லை.
நன்றி: க்வார்ட்ஸ்