லவ் இன்ஃபினிட்டி: காதலில் நான் யார்?
freepik |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: சம்யமா விதேஸ், சஹானா சதுர்வேதி
freepik |
நீங்க திடீர்னு லவ் பண்றீங்க. அப்போ உங்க மைண்ட்ல ராஜா சார் மியூசிக், பப்பி லகரியோட கிளப் சாங், ஏ.ஆர். பிஜிஎம் எல்லாமே சிச்சுவேசனுக்கு வந்து போகும். ஆனால் இங்க நீங்க ஒண்ணை கவனிக்கனும்.
லவ் பண்றவங்களுக்கு வேண்ணா அவங்க இரண்டாம் உலகத்தில இருக்கற மாதிரி தோணும். ஆனா அவங்கள Friends, Parents எல்லாம் அத்தனை கூத்தையும் பார்த்துக்கிட்டு ஆடுறா ராசா ஆடு என காலண்டரில் கணக்கு போட்டு காத்திருப்பார்கள்.
கஷ்டப்பட்டு சாதி பிரச்னை இல்லாம ஒரு பொண்ணை நம் மனசுக்கு புடிச்ச மாதிரி செலக்ட் பண்றது இருக்கே, அது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா? அந்த நேரத்திலதான் கில்டி குணா வந்தான். இவன் பிரச்னை, மூணு வேளைக்கு முப்பது முட்டையைத் திங்கிறதுதான்.
மைதிலி மாதிரி ஊரே ஆச்சரியப்படுற செவப்பான புள்ள எங்கு சொந்தத்திலேயே கிடையாது. எப்படியாவது இவளை கல்யாணம் பண்ணிட்டன்னா எனக்கு குடியரசுத்தலைவர் கைல விருது வாங்குனா மாதிரி. நமக்கு புடிச்ச மாதிரி பூமெக்ஸ் ஜட்டி கூட கெடைக்க மாட்டேங்குது. இந்த நேரத்துல இது செவ செவன்னு ஒரு புள்ள நம்முகிட்ட பேசுதுன்னா நாம கெத்துதானா?
அந்த ஒரு காரணத்துக்காகவே கில்டி குணாவுக்கு ஆம்லெட் ஆஃபாயில் வாங்கிக்கொடுத்து Friend ங்கிற பேர்ல செக்யூரிட்டியா வெச்சிருந்தோம். நான்னா, ஸ்ரீராம், செல்வா, யுவராஜ் எல்லாரும்தான். பசியா இருக்கும்போது குணா, நம்மளோட குற்றவுணர்ச்சியைத் தூண்டறா மாதிரி, என்னைக்கோ குடுத்த வாக்குறுதி, சரக்கு அடிக்கும்போது பேசின வீராப்பு மேட்டரையெல்லாம் எடுத்துப் பேசுவான். உதவி செய்யிலீன்னா செருப்பு எடுத்து மண்டையிலேயே அடிப்பான். நமக்கு வலிக்காது. ஏன்னா, அவன் மண்டைல அவனே அடிச்சா நமக்கு எப்படிங்க வலிக்கும்.
ஆனால் வயிறு நிறைஞ்சா அவன மாதிரி Friend யாரும் கிடையாது. ஆனாலும் ஒருநாள் மைதிலியை Bitch அப்படின்னு சட்டுன்னு சொல்லிட்டான். செல்வா, யுவா எல்லாரும் என்னைப் பார்க்க, ஆணழகன் விருது வாங்கினவன்னு கூட பார்க்காம குணா வாயிலேயே குத்தினேன். குணா பல்லுல ரத்தம் வர ஆரம்பிக்க, அவன் முறைச்சிட்டே போயிட்டான். நன்றியுள்ள நாய் அவன். ஹா ஹா... ஆகா, கதை நெகட்டிவ்வா போகுதா?
இங்க பாருங்க நீங்க படிக்கிற கதை மோகனோடது. அவன் தனக்கு மட்டும்தான் நல்லது நடக்கணும்னு நினைப்பான். மத்தவங்களுக்கு உதவி பண்ணினாலும் வட்டியும் முதலுமா அதை திரும்ப வாங்கறக்கு அவனுக்கு தெரியும். சரி, சொல்லுங்க இங்க யாரு சுயநலமில்லா இருக்கறா?
மைதிலி, பயங்கரமா அலட்டிக்கிறாளே? எனக்கு அவ அந்தஸ்துதான். ஆனா அவளுக்கு நான் செக்யூரிட்டியாக இருக்கணும். சோறு போடணும். பேங்க் பேலன்ஸ் வெச்சிருக்கணும். நைட்டு திருப்தியா உடம்புக்கும் பசியாத்தணும். பொம்பளைன்னாத்தான் கஷ்டம் இருக்கணுமா என்ன?
எனக்கு இந்த love ஜெயிக்குதோ இல்லையோ, இந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு முக்கியம். அது ஒரு த்ரில் இல்லையா? என்னோட ரத்த சம்பந்தமில்லாத ஒரு மனசு, உடம்புக்குள்ள துடிச்சிட்டிருக்கு அப்படின்னா சும்மா ஜிவ்வுன்னு ஒரு பரவசம் மனசுக்குள்ள பரவுதே... அது ஏன்? அது எனக்கு எப்பவும் வேணும்.
Ambika முதலில் என்னை பிராக்கெட் போட பார்த்தா. என்னென்ன சிக்னல்லாம் கொடுத்தா. நாம ட்ரை பண்ணி அது நமக்கு கிடைச்சாத்தானே வேட்டை ருசிக்கும். இல்லையா? ஜெயிச்சப்புறம் வர்ற வெறுமை எனக்கு பிடிக்காது. ஆப்பிள்ல நான் வாஷிங்டனை செலக்ட் பண்ணுவேன். சிம்லா மாதிரி எப்பவும் கிடைக்கிறதுல எனக்கு ஆர்வம் இல்ல.
மனுசனுக்கு ரெண்டு விஷயம் எப்பவும் பிடிக்கும். ஒண்ணு ஒருத்தரை கன்ட்ரோல் பண்றது. இல்ல, ஒருத்தரோடு கன்ட்ரோல்ல இருக்குறோம்னு நம்ப வைக்குறது. பொண்ணுங்ககிட்ட இந்த ரெண்டையும் மாத்தி மாத்தி செய்யணும். ஃபார்முலா ஒண்ணுதான். ஆனா இதை தகுதியான ஆட்கள் கிட்ட அப்ளை பண்ணா ஹிட்டாகும். இல்லனா 12 பி படம் மாதிரி சூப்பர் பாட்டு ஆனா படம் ஃபிளாப் மாதிரி கந்தரகோலமாயிரும். ஆனா இதுல நான் லவ் டெரரிஸ்ட்தான்.
(காதல் சொல்லுவேன்)