போலிச்செய்தி நாயகர்கள்!


Image result for fake news
Towards Data Science




போலிச்செய்தி நாயகர்கள்


ஆக்ஸ்ஃபோர்டு அகராதி, தகவல்களை சோதிப்பது என்பதை தகவல்களின் உறுதித்தன்மையை புலனாய்வு செய்து அறிவது என்று வரையறுக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் குளோபல் ஃபேக்ட் எனும் மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் தகவல்களைச் சோதிக்கும் உலகளாவிய நிறுவனங்கள் பங்கேற்றன. தகவல்களை சரியானபடி சோதித்து வெளியிடுவதில் உதவும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.

இன்று இதழியலிலும் இது ஒரு சோதனைக்காலம். சரியான செய்திகள் என்று எதனையும் உறுதிப்படுத்தி வெளியிட முடியவில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடகங்களின் இடத்தை என்றோ எடுத்துக்கொண்டு விட்டன.

காலையில் எழுந்ததும் அன்றைய நிகழ்ச்சிகளை, தூங்கிய பின் உலகில் நிகழ்ந்தவற்றை அறிய ஃபேஸ்புக் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. நேரடியாக செய்தி என்பதை விட செய்தியின் தாக்கம், அதுபற்றிய மக்களின் கருத்து என ஊடகங்கள் செய்வதை மிக வேகமாக மக்களுக்கு பரப்புகிறது. காரணம், இதிலுள்ள மக்கள் பங்களிப்பது. அதேசமயம் இத்தளத்தில் பதிவிடப்படுபவை அனைத்தும் விருப்பு வெறுப்பற்றவை என்று கூற முடியாது. 

உணர்ச்சிக்கொந்தளிப்பில் பிறரையும் ஈடுபடுத்தவேண்டும் என்ற நோக்கில் எழுதப்படும் பதிவுகள், பல்வேறு பகுதி மக்களின் வாழ்க்கையையும் ஆபத்தில் தள்ளுகின்றன. புல்வாமா தாக்குதலில் காஷ்மீரிகளின் மீதான தாக்குதலை அமைதியாக கவனித்து பிறகு போனால் போகிறதென தாக்காதீர்கள் என பிரதமர் மோடி பதில் சொன்னது போல நிகழ்வதும் சமூக வலைத்தளங்களின் பக்கவிளைவுகள்தான்.

அதில் செய்திகளின் உண்மைகளைத் தேடி பயணிப்பவர்கள் இந்த போலிச்செய்தி நாயகர்கள். இதிலும் கொலை மிரட்டல்கள், தாக்குதல்கள் இல்லாமல் இல்லை.  ஆனாலும் துணிச்சலாக செயல்படுகிறார்கள்.

பாரத் நாயக்
தி லாஜிகல் இந்தியன்

புலவாமா தாக்குதலுக்குப் பின் எந்த ஒரு காஷ்மீரி மக்களும் தாக்கப்படவில்லை என மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் சாதித்தார். அதனை பொய் என நிரூபித்தார் பாரத் நாயக்.

பங்கஜ் ஜெயின்
எஸ்எம் ஹோக்ஸ் ஸ்லேயர்

பாலகோட்டில் விமானப்படை தாக்குதலால் பாதிப்படைந்த பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட புகைப்படம் தவறானது என நிரூபித்தார். இப்படம் புகழ்பெற்ற வலைத்தளமான கெட்டி இமேஜஸிலிருந்து (2005) பெறப்பட்டது.

ஜேம்ஸ் வில்சன்

டெசிபர் தி டீமானிடைசேஷன்

பணமதிப்புக்குப் பிறகு நேரடியாக வரி செலுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர் என்று கூறிய அரசின் பொய்யை அம்பலப்படுத்தி உண்மையை வெளிப்படுத்தியவர் இவர்.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்










பிரபலமான இடுகைகள்