போனை யூஸ் பண்ணாதீங்க!
போனை யூஸ் பண்ணாதீங்க!
சீன போன்களின் பெருக்கம் வந்த பிறகு, அனைவரும் போன்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். தற்போது இதனை ஆல் இன் ஆல் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தி வருகிறோம். இதன்விளைவாக படுக்கை அறையிலும் லேப் டாப் வைத்து ஹாட் ஸ்பாட்டில் கனெக்ட் செய்து வேலை பார்ப்பது இன்றைய நெருக்கடி. ஆனால் இதன் விளைவாக தூக்கமின்மை அதிகரித்து வருகிறது.
படுக்கை விட்டு தள்ளி வைங்க
தூங்குவதற்கு முன்பு 30 நிமிடத்திற்கு முன் சமூக வலைத்தளங்களை விட்டு விலகினால் உங்கள் தூக்கத்திற்கு பிரச்னையில்லை. அந்த நேரத்திலும் ஸ்நாப்சாட் படங்கள், இன்ஸ்டாகிராம் அழகிகள் என ஜொள்ளுவிட்டு போனின் ஸ்க்ரீனை எச்சிலால் நனைத்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. 2017 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு தூக்க குறைபாடு ஏற்படும் என்கிறது.
நோட்டிஃபிகேஷன்ஸ் வேண்டாமே!
போனின் முக்கியமான எரிச்சல். புதிய பதிவுகளைக் காட்டும் நோட்டிஃபிகேஷன்களின் ஒலிதான். இது நிச்சயம் எந்த தூக்கத்தையும் நடுவில் கொஞ்சம் டிஸ்டர்ப் செய்யும். சிஹெச்டி எனும் அமைப்பு, நோட்டிஃபிகேஷன்கள் இல்லை என்றால் தூக்கம் பெருமளவு கெடாது என ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறது.
அதிகநேரம் மொபைல் பார்க்காதீங்க!
ஸ்மார்ட் டிவிகளில் செலவழிக்கும் நேரத்தை டிவிக்களே காட்டத் தொடங்கிவிட்டன. இப்போது மொபைல் போன்களின் முறை. எனவே இதனை ஃபிக்ஸ் செய்து விட்டீர்கள் என்றால் முடிந்தது. மேலும் போன்களின் திரையை கருப்பு வெள்ளையில் மாற்றுவது அல்லது சாம்பல் நிறத்தில் மாற்றுவது அதன் மீதான போதையைக் குறைக்கும் என்பது உளவியல் ஆய்வுகளின் முடிவு. இன்னொன்று அனைத்திற்குமான தீர்வை டெக்னாலஜியில் தேடாதீர்கள். யோசித்தால் உங்களுக்கே தீர்வுகள் கிடைக்கும். வாழ்த்துகள்