பெண்கள் உடையில் பாக்கெட் !






கையில் பாக்கெட்\க்யூரியாசிட்டி




ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி


பெண்கள் உடையில் பாக்கெட் இல்லாதது ஏன்?


ஜீன்ஸில் வரும் பாக்கெட்டுகளில் சிம்பிளான தங்க கிளி கடலை மிட்டாய் கூட வைக்க முடியாது. அப்புறம் ஆண் என்ன? பெண் என்ன? ஜீன்ஸில் வரும் பாக்கெட் என்ன? இருந்தாலும் பெண்களுக்கு ஏன் பாக்கெட் வைக்க மாட்டேன்கிறார்கள். அவர்களுக்கு லக்கேஜ் சுமக்க  ஆண்கள் இருக்கிறார்களே என கடியெல்லாம் வேண்டாம்.


உண்மையில்  மத்தியக்காலங்களில் பெண்கள் ஆண்கள் யாவரும் தனி துணியில் தைத்த பையில் பொருட்களை வைத்துக்கொண்டு சுற்றினர். பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் டெய்லர் ஒருவர் உடையிலேயே பாக்கெட்டை அட்டாச் செஞ்சிடலாமே என யோசித்து செய்ய இன்று நம் சட்டையிலும் பாக்கெட் இருக்கிறது. பெண்களுக்கும் இணைத்தார்கள். ஆனால் மாறிவரும் ஃபேஷன் வேகத்தில் பாக்கெட்டுகள் துருத்திக்கொண்டு எறிய, மெல்ல அதனை தூக்கி விட்டார்கள். பெண்கள் வைத்திருக்கும் பொருட்களுக்கு பாக்கெட்டுகள் எப்படி பிடிக்கும் என லாஜிக்கும் இதற்கு உண்டு.


விக்டோரியா கால பெண்கள்  chatelaines எனும் ஒருவகை ஆபரணத்தை அணிந்தார்கள். பார்க்க கிணற்று வாளிபோல இருக்கும் இதில் பல்வேறு பொருட்களை வைத்துக்கொள்ள முடியும் என்பதால் பாக்கெட் தேவைப்படவில்லை. இன்று பாக்கெட்டுகள் இருந்தாலும் அதில் என்ன வைக்கிறார்கள் என்பது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 

நன்றி: க்யூரியாசிட்டி