லவ் இன்ஃபினிட்டி: பெண் தோழிகளிடம் கவனம்!



BD074 [Happy Birthday] INSIDE: To you and your best friend!
kelly oneal/pinterest




லவ் இன்ஃபினிட்டி 
குமார் சண்முகம்
தொகுப்பு: ஹவில்தார் கேசரி, ரிஷ்விதா கௌர்


நீங்கள் நான் பேசுவது, யோசிக்கிறது இதையெல்லாம் வெச்சு பெரிய ஸ்த்ரீ லோலன் அப்படியெல்லாம் யோசிச்சிருப்பீங்க. ஏன்னா அதுதான் நம்மோட இயல்பு,  ஒருத்தரை பார்க்கும்போதே டிரஸ், முகம், தலை சீவியிருக்கிறதுன்னு கணக்குப்போட்டு கேரக்டரை செட் பண்றது. ஆனால் நான் இதில் எதிலயும் வரமாட்டேன். சேரமாட்டேன். ஏன்னா, நான் கும்பலாச் சேர்ந்து காரியம் செய்றதைவிட தனியாக செய்யணும் என்பதுதான் என்னோட பேராசை.

சுமதி, கிராமத்துப் பொண்ணுதான். என்னோட ஒப்பிட்டா அவ கேள்வி மூலமாகவே நிறைய தெரிஞ்சு வெச்சிருந்தா. பிளஸ்டூ படிக்கிறான்னா அவ உடம்பு பத்தி அவளுக்கு தெரியாதா என்ன, பீரியட் வரும், அதுக்கு நாப்கின் யூஸ் பண்றதுன்னு அவளும் அப்ப தொடங்கியிருந்தா. அவளச்  சமாளிக்கிறதுல எது கஷ்டம்னா, அவ ஒரு இடத்துல இருந்தான்னு வெச்சுக்கோங்க. எதேச்சையா நானு அங்க இருந்து தொலைக்கிறேன். உடனே என்னைக் கண்டுபிடிச்சு, கவனிக்க ஆரம்பிச்சிருவா.  அவள் முழு உடம்பிலும் கண்கள் முளைச்சா மாதிரி பார்க்கிறான்னு என்னோட ஆறாவது அறிவு கண்டுபிடிச்சிடும். நேரா பாத்தா, அவளோட வேலையைப் பாத்துக்கிட்டு இருக்கிறாப்புல தோணும். பெண்கள் மல்டி டாஸ்க்கிங் ராணிகளாச்சே.

இன்னைக்கு பாதுகாப்புக்காக கவர்மெண்ட் ஏராளமான காமிராக்களை பொருத்திட்டாங்க. ஆனா கண்காணிப்புங்கிறத நாம யாருமே விரும்பறதில்லை. இரவில் வெளிச்சத்தைப் போல. சின்ன டெமோ, ஒருத்தரோட போன்ன,  ஜஸ்ட், பஸ்ஸில போகும்போது எட்டிப்பாருங்க. உடனே அவரு தன் போனை மறைச்சுப்பாரு. அதோட முகத்தில அசாதாரண கோபத்தையும் காட்டுவாரு. ஏன்? நமக்கு வீட்டுக்கு ஏன் கதவு வந்ததுங்கிறதுக்கான ஆதாரமே அதுதான். பிரைவசி.

அன்னைக்கும் அப்படித்தான் நான் கூடப் படிச்சவகிட்ட தம் அடிச்சிக்கிட்டே பேசினத பாத்துட்டா. தம் அடிக்கிறது ஓகேம்பா. அந்த மணத்துக்காகவே என் கையப் புடிச்சுக்கிட்டு நடக்கிறது அவளுக்கு புடிக்கும். ஆனா, இன்னொரு பொண்ணுங்கிறத யாரு சகிச்சுக்குவா.  உடனே அவகூட இப்படித்தான் பேசுவியா, என்னென்ன விஷயங்களை பேசுவீங்க, நீங்க ரொம்ப குளோசா, கிஃப்ட் எல்லாம் குடுத்திருக்கீங்களா, நைட் மெசேஜ் பண்ணுவியான்னு தேங்காயைத் துருவ ஆரம்பிச்சுட்டா. ஆனா அத்தனையும் கேட்டுட்டு அவ நிம்மதியா களுக்குன்னு சிரிச்சுட்டு போயிருவ. எனக்குத்தான் சொன்ன பொய் எத்தனை, அதுல மொத பொய் என்னன்னு ஞாபகம் வெச்சுக்க வேண்டியிருக்கும். இந்த நாடகத்தை நாங்க ஃப்ரெண்ட்ஷிப்புங்கிற பேர்ல பண்ணிக்கிட்டிருந்தோம். 

ஒருநாள் அவ கோட்டைக்காட்டு வலசு பக்கத்திலிருக்கிற காட்டுக்கு போறன்னு எதேச்சையா சொன்னா. அப்படியான்னு அசிரத்தையா கேட்டேன். ஏய் நானே அங்க போறன்னு சொல்றேன். நீ என்கூட வர்ற சான்ஸ் பத்தி யோசிக்காம, அப்படியாங்கிறயா ன்னு பிலுபிலுன்னு புடுச்சிக்கிட்டா.

அப்புறம் அடுத்தநாள் தாமரைப்பாளையம் வரை வந்தேன். அவள் கவர்மென்ட் ஸ்கூல் சந்தில் நின்றிருந்தாள். பாவாடையும் தாவணியும் இளமையை மறைக்க மிகவும் சிரமப்பட்டு பெருமூச்சு விட்டன. இருகண்கள் போதாது ராசாத்தியின் அழகைப் பார்க்க....பிஜிஎம் உள்ளே ஓடியது. கைகள்  படப்பட பழுக்கும் பழம் என கே.என்.எஸ்ஸின் புதிர்கள் உள்ளே 70 எம்எம் படமாக விரிந்தன. அந்த நினைப்பில் களைத்து மைதிலி உள்ளே புகுந்தாள். உண்மையில் நான் அப்போ நான் சென்னிமலை மைடியர் மைதிலிய நினைச்சிக்கிட்டிருந்தேன். தங்கத்தை கழுத்தில் போட்டாக்கூட தங்கத்தை கண்டுபிடிக்க முடியாத நிறம் அவள். பெருமூச்சு விட்டு தங்கம் என்று சொன்னேன். உடனே படர்ந்த முகம் டக்கென சுருங்கிப்போச்சு. 

தங்கம், யாரு அது ?

அப்போதுதான் தெரிந்தது. ஐயையோ அடப்பாவி வாய்விட்டா சொன்னேன். சமாளிப்போம். ஏறுவெயிலில் கழுத்துப்பக்கம் வேர்வை வழியத் தொடங்கி, இடுப்பின் வலதுபுறத்தில் இறங்கி டிஎஸ்பி ஜட்டியை நனைத்தது. காப்பாத்துடா டிஎஸ்பி கருடா. 

அது ஏதோ வேற நினைப்புல சொல்லிட்டேன். சும்மா...

இல்ல, உங்கூட படிக்கிற பொண்ணா, சொல்லு..

இல்லப்பா.. விடேன்...

சரி, நீ என்னை எப்போவெல்லாம் நினைச்சுப்பே..

ஏய், லூசு நீ என் ஃப்ரெண்டு.. டெய்லி மூணு தடவை நினைக்கிறதுக்கு நீ என்ன மாத்திரையா என்ன? 

போப்பா உனக்கு கிண்டல் ஜாஸ்தி, சுதா சொன்னா பசங்க லவ் பண்ற பொண்ண நினைச்சு கைவேலையெல்லாம் பண்ணுவாங்கன்னு... நீ செய்வியா?

உன்னை கெடுக்கறதே அந்த சுதாதான். சு காம்பினேஷன்ல ப்ரெண்டு வேண்டாம் சுமா,...

ஹேய் என்ன சொன்னே, சுமா.. சுமா..

சுமதி சும்மா சொன்னேன். சுமான்னு ஒரு ஃப்ளோவுல சொன்னேன். 

இனி நீ இப்படியே கூப்புடேன் சூப்பராக இருக்கு. என்று சொல்லி முடித்தபோது, தாமரை மெட்ரிக் பள்ளியை தாண்டி வந்துவிட்டோம். கழுத்தில் சுமதியின் பூனை முடியைப் பார்த்தேன். வெயிலில் மின்னியது. முழு பெண்ணாக மாறி குடும்ப போட்டோ எடுக்க, உடல் கிண்ணென கனக்க இரண்டு வருஷம் போதும்.

 எப்போது குறும்பு புன்னகை முகத்தில் மின்ன பேசுவது சுமதியின் வழக்கம். வட்ட முகத்தில் புருவங்கள் அடர்த்தி. கீழ் உதட்டில் அழுத்தமான மச்சம் கம்பீரமாக இருந்தது. சிரிக்கும்போது, இடது உதட்டை மெல்லியதாக மடித்துக்கொள்வாள்.

எனக்கு அதுவரை பெண் தோழிகள் என்றால் சீதா, லல்லி, பரமேஸ்வரி ஆகியோர்தான். இதுவும் பதினொன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாவது வரை இரண்டு ஆண்டுதான். அதற்கு முன்னாடி பொவ்வீலை போடும் ஆயாவும், நொனை பேசும் அம்மாவும்தான் தோழிகள்.  ஸ்கூலில் படிக்கும் பொண்ணுகளோடு கிளாஸ் தாண்டி நட்பெல்லாம் எங்கள் ஊரில் சாத்தியமே கிடையாது. நையப்புடைத்து  குஞ்சை குறுகத் தரித்து விடுவார்கள். அவ்வளவு எதுக்கு? எங்க அப்பனுக்கு தெரிஞ்சா, ஆன் தி ஸ்பாட் தூக்கிப்போட்டு ஒடைச்சுப் போடுவார். அதுக்கும் மிஞ்சினா, நட்பைத் தொடர்ந்தால் எங்கள் ஊரில் விளக்கு கம்பத்தில் கட்டி முதுகுப்பூணை கழற்றி விடுவார்கள். நடக்குமா?

 நல்லாயிருக்கீங்களா அம்மணி? நல்லதுங்க என பொதுப்படையாக பேசிவிட்டு நகர்ந்தீர்கள் என்றால் உடலுக்கும் மானத்திற்கு பாதுகாப்பு. 

(காதலைப் பேசுவேன்)