இடுகைகள்

ஸ்ட்ராபெர்ரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்!

படம்
  natashapehrson.com உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள் இன்று ஏராளமான டயட்கள் நடைமுறையில் உள்ளன. நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் சில உணவுப்பொருட்களுக்கு உரிய தனித்தன்மைகள் உண்டு. அந்த வகையில் அவை ஒருவரின் உடலை மெலிதாக்குகிறது. பழக்கமாக்கிடுங்க என விளம்பர பாணியில் கூற முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். யோகர்ட் யோகர்ட்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் பழக முயற்சிக்கலாம். அதில், குறைந்தபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் அதில் இருக்க வேண்டும். லாக்டோபேசில்லஸ் பல்கேரியஸ், ஸ்ட்ரெப்டோகாகஸ் தெர்மோபிலஸ் ஆகியவை பாக்டீரியாக்களுக்கு உதாரணம். யோகர்டை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஜிம்மில் செய்யும் தசை அழகு பயிற்சியை ஆதரித்து வளப்படுத்தும். யோகர்ட்டை பிளெயின் என்ற வகையில் வாங்கி பயன்படுத்தவேண்டும். குறிப்பிட்ட ஃபிளேவர் வகையில் வாங்கினால் அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். யோகர்டில் சர்க்கரைக்கு பதிலாக பழங்களை இனிப்புக்காக சேர்த்து சாப்பிடலாம். கால

இந்தியாவில் வரவேற்பு பெற்று வரும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள்!

படம்
  ஸ்ட்ராபெர்ரி ஆங்கில நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் பழம். ஆனால் இன்று ஆங்கில காலனி நாடுகளிலும் எப்படியோ சமாளித்து இப்பழங்களை உற்பத்தி  செய்து வருகிறார்கள். அப்படித்தான் இந்தியாவில் ஜான்சி பகுதியிலும், குஜராத்திலும் கூட ஸ்ட்ராபெர்ரிக்கான சந்தை உருவாகியுள்ளது.  இதனைப்பற்றி பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இன்று இதைப்பற்றி நாம் பேசினாலும் ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் என்பது ஆங்கிலேயர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. 1884ஆம் ஆண்டு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள கொங்கணி மலைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனை அங்குள்ள சிறைவாசிகள் மூலம் தொடங்கிய ஆங்கிலேயரின் பெயர் எஸ்.எஸ். ஸ்மித்.  மனிதர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் ஒன்றுபோலத்தான். அவர்களுக்கான கலாசார விஷயங்களை உருவாக்கிக்கொண்டேதான் இருப்பார்கள். இதன் அடிப்படையில் கோவில் கட்டுவது, கலாசார மையங்களை அமைப்பது, அவர்களுக்கான தனி குடியிருப்புகளை அமைப்பது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆங்கிலேயர்களின் அனைத்து காலனி நாடுகளிலும் அவர்களின் நாட்டைப் போலவே சிறுபகுதி ஒன்று செயல்பட்டு வரும். அவர்கள் பல்வேறு