உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்!

 


உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்

இன்று ஏராளமான டயட்கள் நடைமுறையில் உள்ளன. நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் சில உணவுப்பொருட்களுக்கு உரிய தனித்தன்மைகள் உண்டு. அந்த வகையில் அவை ஒருவரின் உடலை மெலிதாக்குகிறது. பழக்கமாக்கிடுங்க என விளம்பர பாணியில் கூற முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

யோகர்ட்

யோகர்ட்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் பழக முயற்சிக்கலாம். அதில், குறைந்தபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் அதில் இருக்க வேண்டும். லாக்டோபேசில்லஸ் பல்கேரியஸ், ஸ்ட்ரெப்டோகாகஸ் தெர்மோபிலஸ் ஆகியவை பாக்டீரியாக்களுக்கு உதாரணம். யோகர்டை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஜிம்மில் செய்யும் தசை அழகு பயிற்சியை ஆதரித்து வளப்படுத்தும்.

யோகர்ட்டை பிளெயின் என்ற வகையில் வாங்கி பயன்படுத்தவேண்டும். குறிப்பிட்ட ஃபிளேவர் வகையில் வாங்கினால் அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். யோகர்டில் சர்க்கரைக்கு பதிலாக பழங்களை இனிப்புக்காக சேர்த்து சாப்பிடலாம். கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளதால் உடலுக்கு ஊட்டம் என்பதோடு, வயிற்றில் செரிமானமும் பிரச்னை இன்றி நடைபெறும்.

 ஸ்ட்ராபெர்ரிஸ்

ஆரஞ்சை விட அதிக விட்டமின் சி உள்ள பழம். புளிப்புச்சுவையோடு நார்ச்சத்தும் உள்ளது. கொழுப்பை குறைப்பதில் விட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி எட்டு ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிட்டால் போதுமான விட்டமின் சி உங்களுக்கு கிடைத்துவிடும். இதை நேரடியாக சாப்பிடலாம் அல்லது சாலட் போல செய்து சாப்பிடலாம். காலை உணவு அல்லது மதிய உணவிற்கு சேர்க்கலாம். இன்று நகரங்களில் தள்ளுவண்டி கடைகளில் கீரை விற்பவர்களே ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் விற்று வருகிறார்கள் என்பதே இதன் செல்வாக்கு எந்தளவு பெருகியுள்ளது என்பதற்கு சான்று.

லென்டில்ஸ்

புரதம், நார்ச்சத்து கொண்ட தானிய வகை. நீரிழிவு நோயை வரவிடாமல் தடுக்கும் திறன் கொண்டது என உணவு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த தானிய வகையை சமைத்து கூடவே நிறைய காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால் நார்ச்சத்துடன் நல்ல கொழுப்பும் உடலில் சேரும்.

அவகாடோ

பார்த்தால் பழம் போல தெரியாது. ஆனால், இதை பழம் என்றுதான் கூறவேண்டும். நல்ல கொழுப்பு கொண்ட பழத்தில் விட்டமின் ஏ, சி, இ, கே, பி6 ஆகியவை நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகம் கொண்டது. இதை சாண்ட்விட்சில், சாலட்டில் கலந்து சாப்பிடலாம் என உணவு வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் திறன் கொண்டது.

இலை காய்கறிகள்

காலிஃப்ளவர், புரோகோலி, முட்டைக்கோஸ் ஆகியவை இந்த வகையில் சேரும். இந்த காய்கறிகளில் ஊட்டசத்துகள் அதிகம்,. கலோரி குறைவு. இதில் உள்ள சல்ஃபோரோபேன் என்ற வேதிப்பொருள், எடை குறைப்பிற்கு பங்களிக்கிறது. சீஸ், ஆலிவ் எண்ணெய், பூண்டு ஆகியவற்றை இலை காய்கறிகளுடன் பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எளிதாக நல்ல பயன்கள் கிடைக்கும். உண்ணும் உணவிற்கு மணத்தையும், பார்க்க அழகாக சாப்பிடத் தூண்டும் இயல்பையும் இலைக்காய்கறிகள் ஏற்படுத்துகின்றன.

ஆப்பிள்

சிவப்பு, பச்சை  என மார்க்கெட்டில் ஏராளமான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்கள் கிடைக்கின்றன. எதை சாப்பிட்டாலும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. ஒரு ஆப்பிளில் தோராயமாக ஐந்து கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது. வயிற்றில் ஏற்படும் செரிமானப் பிரச்னையை தீர்க்கிறது. ஆப்பிள், பிஸ்தா, பாதம் பருப்பு, யோகர்ட், நட் பட்டர் ஆகியவற்றை சேர்த்து ஆரோக்கியமான ஸ்னாக்ஸாக சாப்பிட்டால் டயட் சிறப்பாக அமையும்.

 முட்டை

நாட்டுக்கோழி, கறிக்கோழி என கோழி எதுவாக இருந்தாலும் முட்டையிலுள்ள புரதம் மாறாது. வெள்ளைப்பகுதி, மஞ்சள் கரு என பகுதியாக பிரித்து சாப்பிடலாம். இப்படி எந்த தீண்டாமையின்றி சாப்பிட்டாலும் சரிதான். ஆம்லெட் போல ஊற்றி, அதில் காய்கறிகளை நறுக்கிப் போட்டு, கூடவே அவ காடோவையும் துண்டு செய்து மிதக்கவிட்டு சூடாக்கி சாப்பிடலாம். காலை  உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. நொறுக்குத்தீனி போல நினைத்துக்கொண்டு சாப்பிட்டாலும் குற்றமில்லை. புரதம் கொண்ட உணவு என்பதால் உணவு செரிக்க அதிக நேரமெடுக்கும். அதேநேரம் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும்.

 time magazine


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்