பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

 






நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ்


செல்வம் விஎம்எஸ்

நிறுவனர், இயக்குநர்

வீலோசிட்டி

 

வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி.

ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.  இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது.

விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?

  ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆயிரம் டன்களுக்கு மேல் நஷடம் ஏற்படுகிறது. இதை தடுக்கவே வீல்சிட்டி உருவாக்கப்பட்டது.   ’’ என நம்பிக்கையுடன் பேசினார் செல்வம். தங்களது தொழில்நுட்பம் மூலம் 4 சதவீத உணவு வீணாவது தடுக்கப்படுகிறது என செல்வம் உறுதி கூறுகிறார். விவசாயிகளுக்கு லாபமோ இல்லையோ வீலோ சிட்டிக்கு லாபம் என்பது உறுதியாகியுள்ளது. காய்கறிகளின் எடையையும், செய்யும் செலவையும் பொறுத்து கணக்கிடப்படுகிறது.  பிற மாநிலங்களுக்கும் நிறுவனத்தை கொண்டு செல்ல செல்வம் அரும்பாடுபட்டு வருகிறார்.

விஜயலட்சுமி ஶ்ரீதர்

ஃபார்ச்சூன் இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்