தினசரி இயற்கையில் நடைபெறும் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது - எழுத்தாளர் மிதுல் பருவா

 





ஸ்லோ டிஸாஸ்டர் 


எழுத்தாளர் மிதுல் பருவா




அசாம் மாநிலத்திலுள்ள மஜூலி, உலகின் நீளமான ஆற்றுத் தீவுகளில் ஒன்று. எழுத்தாளர் மிதுல் பருவா, இங்குதான் பிறந்து வளர்ந்தார். இவர் தற்போது சமூகவியல், மானுடவியல், சூழல் ஆராய்ச்சி படிப்புகளை பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். மிதுல், ஸ்லோ டிஸாஸ்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் தான் வளர்ந்து வந்த ஆற்றுத்தீவு எப்படி வெள்ளம், மண் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் மறு குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதை விளக்கி எழுதியுள்ளார். அவரிடம் நூல் பற்றி பேசினோம்.

பிரம்மபுத்திரா ஆறு, அதன் சவால்கள் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் மஜூலி ஆற்றுத்தீவில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். உங்கள் நூலில் முக்கிய அம்சங்களாக கூறியுள்ளவை எவை?

ஸ்லோ டிஸாஸ்டர் நூலில், வெள்ளம், ஆற்றுபரப்பு அரிப்பு ஆகியவை மஜூலியை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கி எழுதியுள்ளேன். இது பிரம்மபுத்திரா ஆற்றின் பகுதியில் கூடுதலாக நடைபெறும் விளைவு எனலாம். இங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை, இயற்கை நெருக்கடிகளால் எப்படி மாறுகிறது என்பதை நூலில் விளக்கமாக எழுதி பதிவு செய்துள்ளேன். நான் பிறந்து வளர்ந்த இடம் என்பதால் எனது நினைவுகளையும் கூறியுள்ளேன்.

வெள்ளம், மண் அரிப்பை மெதுவாக நிகழும் பேரிடர் என்று எப்படி கூறுகிறீர்கள்?

சுனாமி, நிலநடுக்கம் என்பது திடீரென நடைபெறுகிறது. இதன் பாதிப்புகளை நீங்கள் உடனே அடையாளம் காணலாம், மெதுவாக நிகழும் பேரிடர் என்பது தினசரி மெல்ல இயற்கை பாதிப்புகள் நடைபெற்று வரும். அமைதியாக பாதிப்புகள் ஏற்பட்டு அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். 

இதுவரை ஆற்றுப்பரப்பால் 600 சதுர கிலோமீட்டர் பரப்பு அழிந்துவிட்டது. மஜூலியில் வாழும் மக்களும் அங்கிருந்து வேறு இடங்களுக்கு குடியேறிச் செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. ஆற்றுத் தீவுப்பரப்பில் வாழ்ந்தவர்கள், முன்னர் வாழ்ந்த இடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு சற்று இடம்பெயர்ந்து வாழும் சூழலும் நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. இந்த செயல்பாடு ஒரே நாளில் ஏற்பட்டுவிடவில்லை. அமைதியாக மெதுவாக தினந்தோறும் நடந்து வந்தது. இவற்றை ஸ்பாஷியோ டெம்பரல் முறையில் ஆய்வு செய்வது அவசியம்.

உங்கள் கிராமமான மஜூலி இப்போது எப்படி இருக்கிறது?

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆற்றுத் தீவுப்பகுதியாக மஜூலி இல்லை. இன்று நிறைய மாறியிருக்கிறது. இன்றும் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், ஏராளமான நிலங்கள் வெள்ளத்தால், மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.  வளமையை இழந்துள்ளன.  வெள்ள பாதிப்பு என்பது அதிகம் ஏற்பட்டுவருகிறது. மஜூலியின் அடையாளமான சதுப்புநிலங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அதேசமயம் கிராமத்தில் இருந்து அசாமிலுள்ள வேறு நகரங்களுக்கும், மாநிலத்திற்கு வெளியேயும் வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 குறிப்பாக இளைஞர்கள் விவசாயத்தை கைவிட்டு வேறு வேலை தேடி வெளியேறி வருகிறார்கள். மஜூலியை, யுனெஸ்கோவின் தொன்மையான பகுதி என்ற அங்கீகாரத்திற்கு இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பு பரிந்துரைத்துள்ளது. மஜூலியில் சுற்றுலாவை அதிகரிக்க பாலங்கள், கட்டிடங்கள் ஏராளமாக கட்டப்பட்டு வருகின்றன. ஒருபக்கம் ஆற்று வெள்ளத்தால் மக்கள்  தங்கள் நிலங்களை, வாழ்வை இழந்து வருகிறார்கள். இன்னொருபுறம் வளர்ச்சி திட்டங்களுக்காக கான்க்ரீட் சாலைகள், பாலங்கள், கட்டுமானங்கள் உருவாகி வருகின்றன. காலம்தான் இந்த இரண்டு சமச்சீரற்ற நிலைகளையும் சமப்படுத்தும் என நினைக்கிறேன்.

இதுபற்றி, தீவிலுள்ள மக்கள் என்ன சொல்கிறார்கள்?

 தீவிலுள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்தான நிலையை கவிதை, கதை என பல்வேறு வடிவங்களில் சொல்லி வருகிறார்கள். நான் அவர்களிடம் பேசியபோது, இதை தெரிந்துகொண்டேன். ஆற்றை தொடர்புபடுத்தி ஏராளமான கதைகளை மக்கள் பிறருக்கு கூறி வருகிறார்கள்.  இந்த வகையில் தங்களுக்கு ஏற்படும் இயற்கை பேரிடர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

 

சுதிப்தா தத்தா

இந்து

Slow disaater

Mitul baruah

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்