சிறிய இமேஜரி ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து கொடுக்கும் கேலக்ஸ் ஐ! - சுயாஸ் சிங்

 








சுயாஸ் சிங், கேலக்ஸ் ஐ

கேலக்ஸ்ஐ குழுவினர்





சுயாஸ் சிங்,

இயக்குநர், துணை நிறுவனர்

கேலக்ஸ் ஐ

இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான தேவைகளுக்கான இமேஜிங் ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறது, கேலக்ஸ் ஐ. இந்த நிறுவனம், உலகளவில் உள்ள இமேஜிங் ரேடார் சந்தையை குறிவைத்துள்ளது. 40 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்த சந்தை  வளர்ந்துள்ளது. தற்போது இந்தியா, இமேஜிங் ரேடார் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் மற்றும் பிற வெளிநாடுகளிடம் பெற்று பயன்படுத்தி வருகிறது.

அரசியல் சூழல்கள் மாறும்போது வெளிநாடுகள், தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது நிறுத்தப்படும். எனவே, உள்நாட்டில் அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். அந்த வகையில் கேலக்ஸ் ஐ என்ற தனியார் நிறுவனம் இமேஜிங் ராடார் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் வணிக மதிப்பு 15 மில்லியன் டாலர்களாக உள்ளது. மல்டி சென்சார் இமேஜிங் தொழில்நுட்பத்தில் கேலக்ஸ் ஐ மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சிறிய செயற்கைக்கோள்களை , போனில் உள்ளடங்கும் அளவிலான பொருட்களைக் கொண்டு தயாரித்து வருகிறது. இதனால் செலவு பெருமளவு குறைகிறது.

பெரிய இமேஜரி செயற்கைக்கோளின் தயாரிப்பு செலவு 150 மில்லியன் என்றால், சிறியதின் விலை 2 மில்லியன் டாலர்களாக உள்ளது. தற்போது வேளாண்மை சாரந்து இமேஜரி செயற்கைக்கோள் பயன்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, காப்பீடு, கடல்போக்குவரத்து ஆகிய துறைகளிலும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஐஐடியில் கல்வி கற்ற சுயாஸ், தொழில்நுட்ப வரைபடத்தில் இந்தியாவின் பெயரை உயரே கொண்டு வர லட்சியம் கொண்டுள்ளார்.

ராஜிவ் ரஞ்சன் சிங்

ஃபார்ச்சூன் இதழ்


கருத்துகள்