பாரசிட்டமால் சிரப்பால் கல்லீரல் பாதிப்பு - தவறு எங்கே நடக்கிறது?

 



















பாரசிட்டமால் சிரப் ஓவர்டோஸால் கல்லீரல் பாதிக்கப்படும்  குழந்தைகள்- தவறு எங்கே நடக்கிறது?



ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருந்துக்கடையில் பார்மாசிட்டமால் வாங்கி சாப்பிட்டுவிட்டு, வேலைக்கு போகும் பலருக்கும் உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாரசிட்டமால் சிரப்பை காய்ச்சலுக்கு எடுத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்லீரல் செயலிழந்து கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

பெற்றோர் பலரும் பாரசிட்டமாலை  எந்த ஆபத்தும் இல்லாத மருந் து என நினைக்கின்றனர். உண்மையில் அது தவறானது. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிரப், அவர்களின் உடல் எடை அடிப்படையிலானது. ஆனால், பாரசிட்டமால் மருந்து இந்தியாவில் நான்கு  விதமாக தன்மையில் விற்கப்படுகிறது. இதனால் சிரப் ஓவர்டோஸாக கொடுக்கப்பட்டு குழந்தைகள் ஆண்டுக்கு ஒருவரேனும் இறந்து போகிறார்கள். மீதியுள்ளவர்கள் அவசர சிகிச்சையில் வைக்கப்படுகிறார்கள்.  இதை எதிர்கொள்வது எப்படி?

பாரசிட்டமால் சிரப்பைக் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுவலி, வாந்தியில் ரத்தம் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். இல்லையெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி என பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்து பாரசிட்டமால். அதில் இப்படியொரு பிரச்னையா?  பிரச்னை மருந்தில் உள்ள வேதிப்பொருட்கள், அல்லது கலப்படம் சார்ந்தது அல்ல. மருந்தின் அடர்த்தி, எந்த வகையான மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம் என்பதில்தான் உள்ளது.

 ஒரு மாத்திரை அல்லது சிரப்பை ஒருவரின் வயது, எடையைப் பொறுத்து குறிப்பிட்ட டோஸ்களை மாற்றிக் கொடுப்பார்கள். வயது வந்தோருக்கான அளவில் குழந்தை க்கு பாரசிட்டமால் சிரப்பை மாற்றிக்கொடுத்தால் என்னாகும்? மேற்சொன்ன செய்தியில் நடைபெற்ற துயரமும் அதுதான். அதை பெற்றோர் அறியவில்லை.

குழந்தைகளுக்கு அவர்களின் எடையைப் பொறுத்து சிரப்பின் அளவு 10 முதல் 15 மில்லிகிராம் வரைதான் வழங்கப்படவேண்டும். இதில் அதிகபட்சம் 650 மில்லிகிராம் தொடங்கி 1000 மில்லிகிராம் வரை என வரம்பு உள்ளது.  காய்ச்சல் நிற்காதபது ஆறு மணிநேரங்கள் கழித்து ஒருமுறை மருந்தைக் கொடுக்கலாம். ஆனால் சில பெற்றோர், அதிகமான மருந்து கொடுத்தால் நோய் விரைவில் குணமாகிவிடும் என அதி புத்திசாலித்தனமாக யோசிக்கிறார்கள். ஒருநாளைக்கு குழந்தையின் உடல் எடையில் கிலோவுக்கு சிரப்பின் அளவு 60 மில்லிகிராம் என செல்லும்போது மெல்ல கல்லீரல் பாதிக்கப்படத் தொடங்குகிறது.

இந்தியாவில் நான்கு வகையான பாரசிட்டமால் சிரப்புகள் கிடைக்கின்றன. அதில் இருவகை இங்குள்ளது.

160 மில்லிகிராம்/ 5 எம்எல் (அமெரிக்காவில் கிடைக்கும் ஒரே வகை)

125 மில்லிகிராம் /5 எம்எல் (இந்தியா)

750 மில்லிகிராம் / 5 எம்எல்(இந்தியா)

இந்தியாவில் நடக்கும் குளறுபாடு என்னவென்றால், 125 மில்லிகிராம் சிரப்பில் 6 எம்எல் தரவேண்டிய மருந்தை  750 மில்லிகிராம் மருந்தில் மாற்றித் தந்துவிடுகிறார்கள். இதனால் உடனே மருந்து டோஸ் அதிகரித்து குழந்தைகளின் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இப்படி மருந்து சாப்பிடுவதோடு இருமல் மருந்துகளையும் கூடுதலாக பயன்படுத்துவது ஆபத்தானது. ஏனெனில் இருமல் மருந்திலும் பாரசிட்டமால் பங்களிப்பு உள்ளது. இப்படி இரண்டு வழியில் பாரசிட்டமால் கல்லீரலில் சேரும்போது, அதன் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

மருத்துவர்கள் எழுதும் மருந்துகளை பெற்றோர் கவனித்துக் கேட்டு அதன் பயன்பாட்டை புரிந்துகொள்ளவேண்டும். அல்லாதபோது, அவர்களின் பிள்ளைகள் அதற்கான தண்டனையைப் பெறுவதாக சூழல் மாறிவிடும். சிரப்களில் இன்று ஃபிளேவர்கள் வந்துவிட்டன. எனவே, குழந்தைகள் சுவை காரணமாக அதை அதிகமாக குடித்துவிட வாய்ப்புள்ளது. எனவே, மருந்தை தூரமாக குழந்தைகள் எடுக்க முடியாதபடி வைக்கவேண்டும்.

பாரசிட்டமால் ஓவர்டோஸான சூழலில், அதற்கு முறி மருந்தாக என் அசிட்டைல் சிஸ்டைன் மருந்தை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.

 



மருத்துவர் பிரியதர்ஷினி

மருத்தவர் பால ராமச்சந்திரன்

 

டைம்ஸ் ஆஃப் இந்தியா  

Images - creative commons


கருத்துகள்