எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

 







எடை குறைப்பு கேள்விகள்

எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா?

ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது  சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல.

பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும்.

உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.  கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது.

எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி?

தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்கொள்ளும் உணவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே உடல் எடையைக் குறைப்பதில் முக்கியமானது.

மற்றபடி அடிக்கடி எடை பார்ப்பது, லிப்டன் க்ரீன் டீ குடிப்பது எல்லாம் எந்த பயனும் தராதவை. சமூக வலைத்தளங்கள் சார்ந்து இயங்குபவர்கள், இப்படி எடை பார்ப்பதை தீவிரமாக செய்து வருகிறார்கள்.  இதன்மூலம், மனதளவில் நம்பிக்கை பெற முயல்கிறார்கள். ஆனால் உடல் எடை குறைப்பு என்பதற்கு குறிப்பிட்ட காலம் தேவை. அதற்கேற்ப திட்டமிட்டு உடற்பயிற்சி செய்யவேண்டும்.

டைம் வார இதழ்

image -pixabay

கருத்துகள்