அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆண், பெண் இருவருக்குமான காதல், பெற்றோர் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள பாசம் என இரண்டும் வேறுபட்டதா? பெற்றோர், பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள காதலை விட முந்தையது. மனிதர்களை விட விலங்குகள், தங்கள் குட்டிகளை வளர்ப்பதில் அதிக தீவிரம் கொண்டவை. அதில் இடையூறை விரும்புவதில்லை. ஏற்பதில்லை. அந்தவகையில், இரு பாலினத்தவரின் காதலை, பெற்றோராக பிள்ளை மீது காட்டும் பாச உறவோடு ஒப்புமைபடுத்த முடியாது. இரண்டுமே செயல்பாடு, அணுகுமுறை இரண்டிலுமே வேறுபட்டது. ஆண், பெண் என இருபாலினத்தவருக்கான காதல் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறதா? காதலிப்பவர்கள் , அந்த காதலை உறவைக் காத்துக்கொள்ள முயல்வார்கள். பிள்ளைகள் பிறப்பது, அவர்களை வளர்ப்பது, அன்பை வெளிக்காட்டுவது ஆகியவை நடைபெறுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பெற்றோரின் அன்பு, பாதுகாப்பு, பொருளாதார பலம் ஆகியவை கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளலாம். தாய், தந்தையினரின் அன்பு, நேசம் பிள்ளைகளுக்கு மனரீதியாகவும் மாற்றத்தை உருவாக்குகிறது. காதலில் வீழ்வது என்பது ...