கிழக்காசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குக்கர் பெண்களின் வாழ்க்கையை மாற்றியதா?

 

 







 
1962ஆம் ஆண்டு, கணவர் தனது மனைவிக்காக பிரஷர் குக்கர் ஒன்றை வாங்குகிறார். இதைப் பார்த்து அருகிலுள்ள வீட்டுக்காரரும் குக்கர் ஒன்றை வாங்கி மனைவிக்கு கொடுக்கிறார். குக்கரை வாங்கிக் கொடுப்பது, மனைவில் அதை வைத்து வேகமாக சமையல் செய்துவிட்டால் வெளியில் வேலைக்கு செல்லலாம் என கணவர் எதிர்பார்க்கிறார். சமையல் வேலையை செய்துவிட்டு வெளியில் செல்லும் இருவரின் மனைவிகளும் தாங்கள் சந்திக்கும் ஆண்களிடம் காதலில் வீழ்கிறார்கள். இன் தி மூட் ஃபார் லவ் என்ற புகழ்பெற்ற படத்தின் காட்சிகள் மேலேயுள்ளவை. திரைப்படத்தின் கதை ஹாங்காங்கில் நடந்தது.

ஆசியாவில் நடந்த முக்கிய கண்டுபிடிப்புகளி்ல ஒன்று, பிரஷ்ர் குக்கர் கண்டுபிடிப்பு. இதன்மூலம் பெண்கள் சமையல் வேலையிலிருந்து சற்றே விடுபட்டு வேலைக்கு செல்ல முடிந்தது. ஒவ்வொரு வேளைக்கும் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள், குக்கர் வழியாக  ஒரே நேரத்தில் சமைத்து இறக்கிவைத்துவிட முடிந்தது. இன் தி மூட் ஃபார் லவ் படத்தின் இயக்குநர், வாங் கர் வாய் மேற்சொன்ன கருத்தை கூறியிருந்தார்.

ஆல் வி இமேஜின் ஏஸ் லைட் என்ற திரைப்படத்தை இயக்குநர் பாயல் கபாடியா என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தின் காட்சியில், பிரபா என்பவர் தனது தோழியுடன் தங்கி வேலைக்கு சென்று வந்துகொண்டிருப்பார். அப்போது, ஜெர்மனி சென்று பல்லாண்டு காலம் ஆகிவிட்ட அவரது கணவரிடமிருந்து பிரஷர் குக்கர் ஒன்று, அவரது முகவரிக்கு வரும். அந்த குக்கர், பெரிதாக நிறையப் பேருக்கு சமைக்கக்கூடிய கொள்ளளவைக் கொண்டிருக்கும். இருவருக்கு சமைக்க அந்தளவு பெரிய குக்கர் தேவையில்லை என்பதால் பிரபாவும் அவரது தோழியும் அதை வைத்து என்ன செய்வது என திண்டாடிப் போவார்கள்.

பிரபா, தனது விருப்பப்படி வேலைக்கு சென்று வருவாள். கணவர் வெளிநாடு சென்றுவிட்ட காரணத்தால் அவளை கணவனின் குடும்பத்தினர் விலக்கி வைத்திருப்பார்கள். குக்கர், இங்கு ஹாங்காங் இயக்குநர் சொன்ன கருத்தைக் கூறவில்லை. மாறாக, வேலைக்கு சென்றாலும் அவளது குடும்பத்தை அவள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என மறைமுகமாக கூறவருகிறது. ஆய்வாளர் ஹெலன் மெக்நாட்டன், பிரஷர் குக்கர்கள் எப்படி உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன என்பதை விளக்கி கட்டுரைகளை எழுதியுள்ளார். தொடக்கத்தில் ஜப்பானிய பெண்கள் விறகடுப்பில் பானைகளை வைத்து அரிசியை உலையில் போட்டு சமைத்திருக்கிறார்கள்.

தோஷிபா நிறுவனத்தில் பிரஷர் குக்கர்களுக்கான ஆராய்ச்சிப்பணியை செய்ய மூத்த மேலாளர்களே தயங்கியிருக்கிறார்கள். அதற்கு அன்றைக்கு பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்த விஷயங்கள்தான் காரணம். பெண்கள் குடும்பத்திற்காக உழைத்தாலும் அரிசியை அவர்கள்தான் உலையில் ஏற்றி சமைக்கவேண்டும் என்ற மனநிலை இருந்திருக்கிறது. அப்படியல்லாத பெண்களை தோற்றுப்போனவர்களாக கருதியிருக்கிறார்கள்.

மின்சார குக்கர்கள் அப்போதே பல அமைப்புகளில் செயல்பாட்டில் இருந்தன. ஆனால், வெகுசன அளவில் புழக்கத்தில் வரவில்லை. சோறு அதிகமாக வெந்து தீய்ந்துவிடுவது, குக்கர் வெடிப்பது ஆகிய பிரச்னைகள் நடந்து வந்தன. தோஷிபாவின் பிரஷர் குக்கர் மேம்பாட்டுப் பணி இறுதியாக மினாமி யோசிடாடா என்பவரின் மனைவி ப்யூமிகோவுக்கு வந்தது. அவர் குக்கர்களை பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். பெண்கள், சமைக்கும் வேலையில் இருந்து விடுபட்டால், மூன்று மணிநேரங்களை தங்களுக்காக செலவழித்துக்கொள்ள முடியும் என்று கூறியதாக ப்யூமிகோவின் மகன் கூறினார். 


தொடக்கத்தில் குக்கர் இரண்டு கொள்கலன்களைக் கொண்டதாக இருந்தது. வெளியில் உள்ள நீர் சூடாகி உள்ளே உள்ள அரிசியை வேகவைப்பதில், பிழைகள் நேர்ந்தன. சில சமயங்களில் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாமல் சோறு முழுக்க தீய்ந்துபோனது. இப்பிரச்னையை பானசோனிக் தீர்த்து, ஒற்றைக் கொள்கலன் கொண்ட குக்கரை நேஷனல் என்ற பிராண்டில் வெளியிட்டது. சீனர்கள், கொரியர்கள் பலரும் குக்கர்களை ஆசையோடு வாங்கிச் சென்றார்கள். எழுத்தாளர் யோஷிகோ நகானோ, வேர் தேர் ஆர் ஆசியன்ஸ், தேர் ஆர் ரைஸ் குக்கர்ஸ் என்ற நூலை எழுதினார். இதில் பிரஷர் குக்கர் எப்படி ஆசியாவில் மாற்றங்களை ஏற்படுத்தியது என விளக்கியுள்ளார்.
எண்பதுகளில் கிழக்கு ஆசியாவில் பிரஷர் குக்கர் என்பது மிக முக்கியமான சமையலறைச் சாமானமாகிவிட்டது. சோறு எளிதாக சமைத்துவிட்டதால், பெண்கள் வேறு வேலைக்கு தள்ளப்பட்டார்களா என்று தெரியவில்லை. 1959ஆம் ஆண்டு, குக்கரை உருவாக்கிய ப்யூமிகோ தனது நாற்பத்தைந்து வயதில் காலமானார். அப்போதுதான் அவரது ஆராய்ச்சியால் உருவான குக்கர்கள் பற்றிய பாராட்டுகளை பெண்கள் கடிதம் வழியாக தெரிவித்து வந்தனர். பாயல் கபாடியாவின் படம் கூறுவதைப் போல வேலை, உணவு என இரண்டையும் பெண்களின் வாழ்க்கையில் இருந்து எளிதாக பிரித்துவிடமுடியாது.



rice cooker and lives od women in asia
vikrm doctor
ET
where there are asians there are rice cookers - yohiko nakano

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்