இடுகைகள்

மருத்துவர் ஃபிரெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோயாளிகளைக் கொன்று வாழ்வில் உயர்ந்த மருத்துவர்!

படம்
  மருத்துவத்துறையில் நிறைய தொடர்கொலைகாரர்கள் உண்டு. இவர்களை அடையாளம் கண்டு தடுப்பது மிக கடினம். தடுப்பதற்குள் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். பிணக்கூராய்வு செய்து உண்மையை அறிந்தகொள்ள வேண்டும். இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர். இரண்டாம் உலகப்போர் சமயம் ஊக்கத்துடன் செயல்பட்டு 500 பேரை கொன்றார். உண்மையில் இப்போது கூறியுள்ளது கூட தோராயமான எண்ணிக்கைதான். உண்மையான எண்ணிக்கை அல்ல. ஃபிரெட், 1946ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். நல்ல படிப்பாளி. விளையாட்டு வீரரும் கூட. எப்போதும் தன்னைப் பற்றிய பெருமிதத்தில் அலைந்த ஆள். எனவே, நெருங்கிய நட்பு அமையவில்லை. லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதல் முறை விண்ணப்பத்து தோற்றுப்போனவர். இரண்டாவது முறை வெற்றி பெற்று மருத்துவப்படிப்பு படித்தார். தனிமையாக வகுப்பறைக்கு வந்து படித்தவர், பதினேழு வயதான பிரைம்ரோஸ் ஆக்ஸ்டோபி என்ற தனது ஜூனியர் பெண்ணை மணம் செய்தார். 1966ஆம் ஆண்டு மணம் செய்தவருக்கு, 1967ஆம் ஆண்டு மகள் பிறந்தாள். 1971ஆம் ஆண்டு மகன் பிறந்தான். 1974ஆம் ஆண்டு தொடங்கி மருத்துவப் பயிற்சி செய்யத் தொடங்கினார். தனது சக மருத்துவர்கள், நோயாளிகளிடம் ப