இடுகைகள்

தாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாயில்லாத சூழலில் குழந்தைக்கு ஏற்படும் மன நெருக்கடி

படம்
  Mary ainsworth 1950ஆம் ஆண்டு, மேரி, உளவியலாளர் ஜான் பௌல்பையின் ஆய்வுக் கோட்பாட்டை ஒட்டிய ஆய்வுகளை செய்தார். மேற்குலகில் பெற்றோர் பிள்ளைகளோடு குறைந்தளவு ஒட்டுதலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கு நாடுகளில் தாய், குழந்தைகளோடு மிக நெருக்கமாக இருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கும்போது என புரிந்துகொள்ளலாம். குழந்தையின் உடல்மொழியை புரிந்துகொண்டு அதற்கு உணவு வழங்குவது, குளிக்க வைப்பது,உடை மாற்றுவது, உறங்க வைப்பது என அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் தாயுடன் பாதுகாப்பான ஒட்டுதலைக் கொண்டுள்ளன.  வினோத சூழ்நிலை என்ற ஆய்வை மேரி செய்தார். அதன்படி, ஒரு அறையில், அம்மா குழந்தை என இருவர் இருக்கிறார்கள். குழந்தை பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை அம்மா கவனித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இப்போது அந்த அறையில் வெளிநபர் ஒருவர் உள்ளே வருகிறார். இந்த சூழ்நிலையில் குழ்ந்தை எப்படி உணர்கிறது, அதன் உடல்மொழி எவ்வாறு மாறுகிறது என்பதை மேரி ஆய்வு செய்தார்.  அடுத்து, ஒரு அறையில் குழந்தையோடு அம்மா இருக்கிறார். குழந்தை முன்பைப

தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி

படம்
  harry harlow ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.  இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.  ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்பது நிரூபணமானது

இறவாசக்தி பெற்ற முனிவர்களிடம் பெற்ற அதீத சக்தியால் கொலைவேட்கை கொள்ளும் நாயகன் - பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர்

படம்
  தி   பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர் (மங்கா காமிக்ஸ்) தொடர்கிறது… மங்கா ஃபாக்ஸ்   வலைத்தளம் முயி ஒரு அனாதை. அவன் அம்மாவைப் பார்த்ததில்லை. ஊரில் பிச்சை எடுத்து வாழ்கிறான். ஊரிலுள்ளோர் அவனை அடித்து உதைப்பது, தூங்கும் இடத்தை தீ வைத்து எரிப்பது என அவமானப்படுத்துகிறார்கள். கொடூரமாக நடந்துகொள்கிறார்கள். ஆதரவற்றவன் என்பதால் அவமானத்திற்கு பஞ்சமில்லை.   காட்டில் வேட்டையாடச் செல்பவர்களுக்கு தூண்டில் மீன் போல இரையை பொறியில் சிக்க வைக்கும் வேலையை செய்து வருகிறான். அதில் கிடைக்கும் காசுதான் அவன் சோற்றுக்கு உதவுகிறது. அப்படி ஒரு நாள் புலியை பிடிக்கப் போகும்போது ஏற்படும் விபத்தில் புலியின் தாக்குதலில் வேட்டைக்காரர்கள் அனைவரும் பலியாகிவிடுகிறார்கள். இறுதியில் முயியின் தாக்குதலில் புலி இறந்துவிடுகிறது. ஆனால், தாக்குதலின் போது, புலியால் படுகாயமடையும் முயி சாவின் விளிம்பில் இருக்கிறான். அவனைப் பார்த்து இரக்கப்படும் இறவாசக்தி பெற்ற முனிவர்கள் தங்களின் முன்னூறு ஆண்டு தற்காப்பு கலையை சக்தியை அவனுக்கு கொடுத்துவிட்டு உடல் நலிவுற்று இறக்கிறார்கள். உடல் பலவீனமாக இருக்கும் நிலையில் அதீத சக்தி கிடைத்

வாசனை மூலம் நினைவுகளைத் தூண்டிவிடுவது சாத்தியமா?

படம்
  மாலுக்குச் செல்கிறீர்கள். அங்குள்ள தரைதளத்தில் ஹைப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு சென்றவுடன் செல்ஃபில் உள்ள ஒரு பொருளை எடுக்கிறீர்கள். எப்படி அந்த பொருளை உடனே தேர்ந்தெடுத்தீர்கள், அதன் பின்னால் உள்ள தூண்டுதல் என்ன என்பதை யோசித்திருக்கிறீர்களா? அதைப்பற்றித்தான் இந்த நூலில் விலாவரியாக படிக்கப் போகிறோம். நம்மை நாமே புரிந்துகொள்ள போகிறோம். யாவரும் ஏமாளியாக மாற்றப்படுவது எப்படி அறியப்போகிறோம். சில சம்பவங்களைப் பார்ப்போமா? பல்வேறு விபத்துகளில் காயமாகி தனது பெயர் கூட மறந்தவர்களை, தான் எப்படி மருத்துவமனை வந்தோம் என்பதையே நினைவில் கொள்ளாதவர்களை இயல்பான நிலைக்கு எப்படி கொண்டு வருவது? நவீன மருத்துவத்தில் உடல், மனத்திற்கான பல்வேறு சிகிச்சைகள் அதற்கெனவே வந்துள்ளது. இதிலும் கூட டிமென்ஷியா, அம்னீசியா, கோமாவில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி மீட்பது கடினம். ஆனாலும் முயற்சி செய்தால் என்ன கெட்டுப்போய்விடப் போகிறது? இப்போது சற்று புதுமையான முயற்சி ஒன்றைப் பார்ப்போம். 1996ஆம் ஆண்டு, பிரான்சில் இருநூறுக்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு அம

மூளையில் மின்னும் வலி!

படம்
  உணர்வெழுச்சி கொண்ட நாவல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா ? வேலை எப்படி போகிறது ? தாய் - என்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய நாவலைப் படித்தேன் . 1334 பக்கம் . தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம் . பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன . ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன் . அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது . பார்ப்போம் . பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன . இந்தளவு பதிப்பக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை . அறையில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை . பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம் . சாதாரண பாய் வாங்கினால் , எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது . தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது . அன்பரசு 12.7.2021 மயிலாப்பூர் ------------------------------ மூ

வலியால் மரத்துப்போகும் உடல்! - கதிரவனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.7.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா? வேலை எப்படி போகிறது? தாய் - மார்க்சிம் கார்க்கி நாவலைப் படித்தேன். 1334 பக்கம். தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம். பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன.  ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது. பார்ப்போம். பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. இந்தளவு பதிப்பாக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை. ரூமில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை. பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம். சாதாரண பாய் வாங்கினால், எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது. தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது.  அன்பரசு  2 21.7.2021 மயிலை அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. ஒரு கடிதம் எழுதி அன

ஆபத்திலுள்ள தனது மகனை/மகளைக் காப்பாற்ற தாயைத் தூண்டுவது எது?

படம்
  தெரியுமா? தெர்மோரெகுலேஷன் (Thermoregulation) நமது உடல் 37 டிகிரி செல்ஸியஸ் என்ற வெப்பநிலையை எப்போதும் சீராகப் பராமரித்து வருகிறது. இந்த வெப்பநிலையில்தான் மனித உடலின் செல்கள், சீராக வேலை செய்யும் பண்பைக் கொண்டுள்ளன. உடலைக் குளிர்விப்பதில் தோல், மூக்கு ஆகியவை முக்கியமானவை. வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும்போது , மூளையின் சமிக்ஞைப்படி தோல் உடலில் உள்ள நீரை வேர்வைத் துளைகள் வழியாக வியர்வையாக வெளியேற்றுகிறது. இதன் விளைவாக,  உடலின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூக்கின் வழியாக உள்ளே சென்று, வெளியேறும் சுவாசக் காற்றும் உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.   உணர்ச்சிகர வலிமை (Hysterical Strength) தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது, தாய் இதுவரை தன்னால் நினைத்தே பார்த்திராத செயலை செய்வார். அதாவது, காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்க காரை தனியாகவே தூக்குவது போல.. இப்படி நடைபெறுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. ஆனால், உயிருக்கு ஆபத்து வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட நேரத்திற்கு தசைகள் இறுக்கமாகி வலிமை அதிகரிக்கிறது. இந்த நிலையில் அதிவேகமாக ஓட, எடையை

தாயுக்கும் சேயுக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் அறக்கட்டளை!

படம்
  ஸ்ரீமதி மாலதி தனுகார் டிரஸ்ட் அஸ்வினி, மகாராஷ்டிரத்தில் வசிக்கிறார். அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள திலக்நகரில் வாழும் இவருக்கு இப்போது அவரது குழந்தையின் வளர்ச்சி பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவே நேரம் போதவில்லை. ஒரு வயதாகும் அவரது பிள்ளையின் பெயர் சிவ்தேஜ்.  அவரது வயதுக்கு தோராயமாக இருக்கவேண்டிய எடை ஒன்பதரை கிலோ. ஆனால் அஸ்வினியின் பிள்ளையோ, பதினொன்றே முக்கால் கிலோ இருக்கிறான். உயரமும் அவனது வயதுக்கு கூடுதல். இதை எல்லாவற்றையும் விட அவன் ஆரோக்கியமாக இருக்கிறான்.  குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் உணவு உண்ண முடியாமல் வாந்தி எடுத்திருக்கிறது. மருத்துவமனையில் காட்ட அவர் தாயுக்கும் சேயுக்கும் உணவுத்திட்டத்தை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அதன்பிறகுதான் குழந்தையின் வளர்ச்சி சிறக்கத் தொடங்கியிருக்கிறது.  ஒன்றிய அரசு குழந்தைகளுக்கு உணவில் இரும்புச்சத்து குறைந்து வருவதால் செயற்கை ஊட்டமேற்றிய அரிசியை பொது விநியோக முறையில் வழங்கத் தொடங்கியது. இது வெற்றியடையாமல் தோற்றுப்போனது ஒருபுறம் இருக்க, நடப்பாண்டில் அத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த இருக்கிறார்கள்.  அஸ்வினிக்கு குழந்தையி

மகனின் கொள்கைக்காக தன்னையே அர்ப்பணிக்கிற தாய்! - தாய் - மார்க்சிம் கார்க்கி

படம்
மாதிரிப்படம் தாய்  மார்க்சிம் கார்க்கி தொ.சி. ரகுநாதன் ரஷ்யாவில் மன்னருக்கு எதிராக கலகம் செய்யும் தொழிலாளர்களின் கதை. இதில் முக்கியமான பாத்திரங்களாக பாவெல், அவனது அம்மா பெலகேயா நீலவ்னா ஆகியோர் உள்ளனர்.  நீலவ்னாவுக்கு நடக்கும் திருமணமே எதிர்பாராத விபத்தாக அவளது சொல்லில் வெளிப்படுகிறது. அதற்குப் பிறகும் அடி, உதை என வாழ்கிறாள். குழந்தை பிறந்தாலும் அவளது வாழ்க்கை பெரிய மாற்றங்களின்றி வலியோடுதான் இருக்கிறது. பாவெல் அவனது அப்பா குடிநோயால் இறந்தபிறகு ஆலை வேலைக்கு செல்கிறான். பிறரைப் போல குடிக்காமல் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் வாங்கிய நூல்களை படித்துக்கொண்டிருக்கிறான். இது அவனது அம்மாவுக்கு முதலில் பெருமையாக இருந்தாலும் பின்னர் ஏதோ பிரச்னையாக தோன்றுகிறது.  பாவெல் அடிக்கடி வெளியே கிளம்பிவிட்டு தாமதமாக வீடு வருகிறான். சில நாட்களில் வீட்டுக்கு வருவதில்லை. அவன் எங்கு செல்கிறான் என்பதை நீலவ்னா அறியும்போது அதிர்கிறாள். நாட்டை ஆளும் ஜார் மன்னருக்கு எதிரான சோஷலிச அணியில் மகன் சேர்ந்துவிட்டான். கட்சியில் சேர்ந்து படிப்பது, எழுதுவது, பேரணிகளை நடத்துவது என சென்றுகொண்டிருக்கிறான்.  நீல

72 மணிநேரத்தில் கொலைக்குற்றவாளியைக் கூண்டிலேற்ற காலப்பயணம்! மிரேஜ் 2018

படம்
    மிரேஜ் 2018 ஸ்பானிய திரைப்படம்  Spanish Durante la tormenta Directed by Oriol Paulo Produced by Mercedes Gamero Mikel Lejarza Eneko Lizarraga Jesus Ulled Nadal Written by Oriol Paulo Lara Sendim Starring Adriana Ugarte Chino Darín Javier Gutiérrez Álvarez Álvaro Morte Nora Navas Music by Fernando Velázquez Cinematography Xavi Giménez 1989 ஆம் ஆண்டு டிவியில் கிடாரை வாசித்த பதிவு செய்துகொண்டிருக்கிறான் சிறுவன் ஒருவன். அப்போது எதிர்வீட்டில் ஏதோ சண்டை போடுவது போல சத்தம் கேட்க, அங்கு சென்று பார்க்கிறான். மனைவி கத்தியால் குத்துபட்டு கிடக்க, மேலிருந்து கீழே வரும் கணவரின் கையில் கத்தி. பயந்துபோய் சிறுவன் ஒடுகிறான். அவனை துரத்தியபடி கொலைகார கணவர் வருகிறார். சாலையில் வேகமாக வரும் காரை எதிர்பார்க்காமல் சிறுவன் செல்ல, அவன் அடிபட்டு கீழே விழுந்து உயிரை விடுகிறான்.  2014இல் அதேசிறுவன் வாழ்ந்த வீட்டுக்கு வெரா ராய் என்ற பெண்மணி கணவனுடன் தங்குவதற்கு வருகிறாள். அங்கு நிகோ என்ற இறந்துபோன சிறுவனின் டிவி, வீடியோ கேமரா கிடைக்கிறது. அந்த நேரம் பார்த்து வானில் புயல் ஒன்று ஏற்படுகிறது. இடி, மின்னல், காற்

கரு உருவாவது தாய்க்கு தெரியாமல் இருக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி கர்ப்பிணியாக இருப்பது ஒருவருக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டா? கிரிப்டிக் என்று குறிப்பிடப்படும் இந்த நிலைமை மிகவும் அரிது. ஐநூறில் ஒன்று என்ற அளவுக்கு  கரு உருவாவது பெண்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எப்படி உடலில் கரு உண்டாவது பெண்களுக்கு தெரியாமல் போகும்? கரு உண்டாகும் தொடக்கத்தில் பிறப்புறுப்பில் சிறிது ரத்தம் வடியும். அதனை மாதவிடாய் என பெண்கள் நினைத்து கம்மென்று இருந்துவிடுவதுதான் காரணம். ஹெச்சிஜி எனும் ஹியூமன் கோரினோக் கொனாட்ரோபின் ஹார்மோனில் ஏற்படும் பாதிப்புகளாலும் பெண்களுக்கு உடல் மாறுபாடுகள் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. கரு உருவானாலும் உடனடியாக அவர்களால் கண்டுபிடிக்காமல் அதன் மீது சந்தேகப்படாமல் இருக்க முடிகிறது. நன்றி - பிபிசி