இடுகைகள்

காமெடி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாலிபிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! கோலாவுக்கு தண்ணீர் ! ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு பகுதியில் சைக்கிள் டூர் சென்றார் மேட் சல்லி . எதேச்சையாக காட்டுப்பாதையை கவனித்தபோது , அங்கு சிறிய கோலா கரடி தாகத்தில் தவித்து நின்றது . " உடனே சோர்ந்து நின்ற கோலாவை அணுகி பாட்டிலில் இருந்த நீரை புகட்டினேன் . மலைப்பகுதியில் வெப்பத்தில் நீர் வறண்டுபோயிருக்கலாம் " என்பவர் பதிவிட்ட மனிதநேய வீடியோ இணையத்தில் கலக்கல் ஹிட் . பேண்ட்டுக்குள் மீன் ! அமெரிக்காவின் ப்ளோரிடாவிலுள்ள மீன் கண்காட்சியகத்தில் கண்ணாடிப்பெட்டியில் நீந்திய மீனைக்  காணோம் . அப்போது கடையில் இருந்த க்ரஷ் கார்சியா , கிரிஸ்டல் டிக்ஸன் ஆகிய இரு நண்பர்களும் மீன்களை பேன்டில் போட்டுக்கொண்டு எஸ்கேப்பாவது பின்னர் பாதுகாப்பு கேமராவில் பார்த்தபோது தெரிந்தது .  தற்போது கார்சியா கைதாகினாலும் மீன்களையும் , டிக்ஸனையும் போலீஸ் தேடிவருகிறது .  பிட்ஸ் ! போலீசுக்கு ராங் மெசேஜ் ! ப்ளோரிடா போலீசுக்கு திடீரென ஒரு மெசேஜ் . உன்னிடம் மரிஜூவானா இருக்கா எனக்கு வேணுமே ? உடனே போலீஸ் , கெய்ன்ஸ்வில்லே போலீஸ் பேட்ஜ் படத்தை அவருக்கு அனுப்ப , ராங் ம