இடுகைகள்

மருத்துவத்தில் புதுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளைக்கு ஸ்டெதாஸ்கோப்!

மூளைக்கு ஸ்டெதாஸ்கோப் ! மிகச்சிக்கலான நரம்புகளைக் கொண்ட மூளை இன்றுமே ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிர் . அதனைத் தீர்க்கவே ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் மூளையின் அலைகளை ஒலியாக மாற்றும் கருவியான ஸ்டெதாஸ்கோப் ஒன்றையும் , நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆகியோர் மூளையின் அலைகளை கண்டறிய உதவும் magnetoencephalography (MEG) ஹெல்மெட்டையும் கண்டுபிடித்துள்ளனர் . வலிப்புநோயை உடலில் ஏற்படும் மாற்றங்களை கொண்டுதான் அறிகிறோம் என்பதால் அது ஏற்படுத்தும் சில குறைபாடுகளை சரிசெய்ய முடியாமல் போய் மூளையும் பாதிக்கப்படுகிறது . " அனைத்து வலிப்புகளும் உடலை பாதிக்கின்றவைதான் . அவசரப்பிரிவில் உயிருக்கு போராடிவருகின்ற 90 சதவிகிதமானோர் அமைதியான வலிப்புநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் " என்கிறார் மருத்துவர் ஜோசப் பர்விஷி . ஆனால் வலிப்பு பிரச்னை மூளையில் மெல்லியதாக ஏற்பட்டாலும் EEG ஸ்கேனில் எளிதாக கண்டறியலாம் . மூளையில் ஏற்படும் அலைகள் ஒலிகளாக்கி அதனை அறிந்து வலிப்பிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது . இயல்பான மூளை செயல்பாடு ஹம் என்ற ஒலியையும் , இதில் மாறுபாடு ஏற்படும்போது அலறல் ஒலியும் ஏற