இடுகைகள்

இந்து முஸ்லீம் ஒற்றுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்யமேவ ஜெயதே மின்னூல் இப்போது கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில்.... வாசியுங்கள்!

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் இந்தியா எப்படி இருக்கிறது, காந்தியின் காலத்திற்கும் இன்றைக்கும் என்ன வேறுபாடுகளை நாடு அடைந்திருக்கிறது, இன்றும் விவாதிக்கப்படும் காந்தியின் கருத்துகள், பரிசோதனைகள் என்ன என்பதைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டுள்ள நூல் இது. பல்வேறு மதவாத சக்திகளும் காந்தியை தத்தெடுத்து தங்களின் கருத்துகளுக்கு ஏற்றபடி அவரை உருமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் காந்தியவாதிகள் எப்படி செயல்படவேண்டும் என்பதையும் நூல் கூறுகிறது. உண்மையே கடவுள் என்பதை ஒருவர் தன் வாழ்வு வழியாக எப்படி தேடி கண்டறிகிறார் என்பதற்கு காந்தியின் வாழ்க்கையே முக்கியமான சான்று. நூலில் காந்தி நல்லவர் என்று வாதிடவில்லை. அவர் பல்வேறு குறைகளைக் கொண்ட மனிதர்தான். மகத்தான மனிதராக மாற இடையறாது பல்வேறு பரிசோதனைகளை செய்துகொண்டிருந்தார். உண்மையை காந்தி கடவுளென கண்டுகொண்ட தருணம் முக்கியமானது. பல்வேறு அக, புற அழுத்தங்களுக்கு இடையில் இந்தியாவை ஒரே நாடாக கலாசார வேற்றுமைகளோடு கட்டமைக்க முயன்ற ஆளுமை காந்தி. நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான பல்வேறு திறன்கள் உள்

பிரிவினை காயங்களை ஆற்ற முயன்ற காந்தி!

படம்
  காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாகிரகத்தின் இந்திய முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார் . ஆனால் வெளிநாட்டில் பெற்ற வெற்றபோல உடனே இங்கு வெற்றி கிடைக்கவில்லை . 1930 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடியபோது மக்கள் ஆங்கிலேயர்களை அடித்து வன்முறையை உருவாக்கிய சம்பவங்கள் நடந்தன . இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் எனவே , அப்படியே நடத்தி சுதந்திரத்தைப் பெறுவோம் என காந்தி நினைக்கவில்லை . போராட்ட அமைப்பைத் தொடங்கி திடீரென இடையில் போராட்டத்தை நிறுத்துவது தனக்கு அவமானம் என காந்தி நினைக்கவில்லை . தான் நினைத்த வடிவில் போராட்டம் நடைபெறவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் . இதன் விளைவாக சிலமுறை தான் தான் நடத்த்திட்டமிட்ட போராட்டங்களை நோக்கம் நிறைவேறும் முன்னரே நிறுத்தியிருக்கிறார் . பிறரைப் புரிந்துகொண்டு மக்களின் நலன்களை முன்னிறுத்த காந்தி முயன்றார் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் . தோல்வியும் அடைந்திருக்கிறார் . நீதிமன்றத்தில் வாதிட முடியாமல் தனது சக வழக்குரைஞர்களிடம் வழக்காடுவதற்கு கோரியவர்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி பேசினார் . அவர்களையும

என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை! சரோஜினி நாயுடு ஆல் இந்தியா ரேடியோ உரை!

படம்
    என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை !     சரோஜினி நாயுடு 1948 ஆண்டு பிப்ரவரி 1 அன்று , இந்துத்துவவாதிகளால் காந்தி சுடப்பட்டு இறப்பதற்கு இரு நாட்களுக்குப் பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் சரோஜினி நாயுடு ஆற்றிய உரையின் சுருக்கம் இது . இன்று காந்தியை விரும்பிய அனைவரும் , அவரை அறிந்தவர்கள் , அவரது பெயர் மட்டுமே கேள்விப்பட்டவர்கள் கூட அவருக்காக அஞ்சலி செலுத்துகிறோம் . ஒரு அதிசயம் போன்ற ஆளுமை அவர் . அவரது இழப்பு நம் மனதில் சோகத்தையும் கண்ணீர் கண்ணீரை ஆற்றொழுக்காகவும் பெருக்குகிறது . அவர் எப்படி வாழ்ந்தார் , தனது வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை இழந்தார் , அவரது ஆன்ம சக்தி எத்தகையது , வெறும் சதையல்லாத ஆற்றலின் வடிவமாக உலக ராணுவ வலிமைகளையும் மிஞ்சியிருந்தார் . காந்தி சிறியவர்தான் , எளியவர்தான் . அவரிடம் பணம் கூட கிடையாது . ஏன் உடுத்திக்கொள்ள உடலை மறைக்க முழுமையான உடை கூட அவரிடம் இல்லை . ஆனால் அவரை விட வலிமையான ஆயுதங்களை கொண்டவர்களை எதிர்த்து நின்றார் . இது உலகளவில் எங்காவது சாத்தியமா ? இதற்கு காரணம் ஒன்றுதான் , அவர் யாருடைய பாராட்டுகளுக்காகவும் ஏங்கவில்லை . அ