சத்யமேவ ஜெயதே மின்னூல் இப்போது கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில்.... வாசியுங்கள்!

 











காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் இந்தியா எப்படி இருக்கிறது, காந்தியின் காலத்திற்கும் இன்றைக்கும் என்ன வேறுபாடுகளை நாடு அடைந்திருக்கிறது, இன்றும் விவாதிக்கப்படும் காந்தியின் கருத்துகள், பரிசோதனைகள் என்ன என்பதைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டுள்ள நூல் இது. பல்வேறு மதவாத சக்திகளும் காந்தியை தத்தெடுத்து தங்களின் கருத்துகளுக்கு ஏற்றபடி அவரை உருமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் காந்தியவாதிகள் எப்படி செயல்படவேண்டும் என்பதையும் நூல் கூறுகிறது. உண்மையே கடவுள் என்பதை ஒருவர் தன் வாழ்வு வழியாக எப்படி தேடி கண்டறிகிறார் என்பதற்கு காந்தியின் வாழ்க்கையே முக்கியமான சான்று. நூலில் காந்தி நல்லவர் என்று வாதிடவில்லை. அவர் பல்வேறு குறைகளைக் கொண்ட மனிதர்தான். மகத்தான மனிதராக மாற இடையறாது பல்வேறு பரிசோதனைகளை செய்துகொண்டிருந்தார். உண்மையை காந்தி கடவுளென கண்டுகொண்ட தருணம் முக்கியமானது. பல்வேறு அக, புற அழுத்தங்களுக்கு இடையில் இந்தியாவை ஒரே நாடாக கலாசார வேற்றுமைகளோடு கட்டமைக்க முயன்ற ஆளுமை காந்தி. நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான பல்வேறு திறன்கள் உள்ளன. சத்யமேவ ஜெயதே நூல் காந்தியைப் பற்றிய, அவரது கருத்துக்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்தான். இதன் வழியாக நீங்கள் பல்வேறு நூல்களைக் கண்டடைந்து காந்தியின் அனுபவ தரிசனத்தைப் பெறலாம்.


நூலை வாசிக்க கிளிக் செய்யுங்க.....

கருத்துகள்