செத்தும் பிழைத்து வந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் அதிசாகச நாயகன்! யமுடிக்கி மொகுடு - சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி

 

யமுடிக்கி மொகுடு
சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி
இயக்கம் - ராஜ் பினி செட்டி


தமிழில் அதிசயப்பிறவி என்ற ரஜினிகாந்த் நடித்த படம் என நினைக்கிறேன். அதைத்தான் தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி அட்டகாசமாக நடித்து படமாக்கியிருக்கிறார்கள். 


சென்னையில் வாழும் காளி என்ற ரௌடிக்கும், சட்டவிரோத தொழில் செய்யும் இரு பணக்கார ர்களுக்கும் நேரும் பிரச்னைதான் படத்தில் வரும் முதல் பகுதி. இதில் பணக்கார ர்கள் விரோதிகளாக இருந்து பிறகு நண்பர்களாகி காளியை லாரி மூலம் விபத்துக்குள்ளாக்கி கொல்கிறார்கள். பிறகு, காளியின் ஆன்மா எமலோகம் சென்று தனக்கான நீதியைப் பெற்று திரும்ப வந்து எதிரிகளை அழிப்பதுதான் கதை. 


இன்னொருபுறம், கிராமத்தில் பெரும் சொத்துள்ளவரின் வாரிசு, பாலு. இவரது சித்தப்பா. அதாவது பாபாய். பாலுவை பயந்தாங்கொள்ளியாக வைத்துக்கொண்டு அவரது சொத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பாலுவின் அம்மா பெரிய வீட்டில் இருந்தாலும் வேலைக்காரி போல வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் இறந்துபோன காளியின் ஆன்மா பாலுவின் உடலுக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? அதேதான். ரவுசுதான். கூடவே அப்பிராணி பாலுவுக்கு பாவாடை தாவணியில் விஜயசாந்தி வேறு காதலியாக இருக்கிறார். அப்புறம் என்ன, டூயட்டுகளை ராதாவும், விஜயசாந்தியும் பிரித்துவைத்துக்கொண்டு ஆடித்தீர்க்கிறார்கள். இசை, ராஜ் கோட்டி. படம் மிகவும் சீரியசாக போகும் என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. படத்தை ரசித்து ஜாலியாக பார்க்கலாம். 


படத்தில் ராதாவின் காதலை விட விஜயசாந்தியின் காதல் சற்றே பலம் கொண்டதுதான். பிறகு இருவரும் சேர்ந்து பாலுவின் உடலில் உள்ள காளியின் ஆன்மாவை பற்றி கவலைப்படாமல் அவரோடு ஒன்று சேர்வதே இறுதிக்காட்சி..


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை