டைம் 100 - எய்லீன் கு, வாலெரி மாசன், டெல்மோடே அண்ட் பான்மாவோ ஜாய், எமிலி ஆஸ்டர், துலியோ டி ஆலிவெய்ரா, சிக்குலில்லே மோயோ

 

Eileen gu




டைம் 100


வளர்ந்து வரும் ரோல்மாடல் 


எய்லீன் கு


ஒலிம்பிக்கில் எய்லின் கு மூன்று மெடல்களை வென்றுள்ளார். இன்று விளையாடும் விளையாட்டு வீரர்களில் அவரைப் போல ஒழுங்கு கொண்ட விளையாட்டு வீரரைப் பார்ப்பது மிகவும் கடினம். அந்தளவு தனது விளையாட்டு மீது ஆர்வமாக இருக்கிறார். ஒருமித்த கவனம், கடின உழைப்பு, அதற்கான அர்ப்பணி என அத்தனை திறமையான அம்சங்களையும் அவர் கொண்டிருக்கிறார். 


பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக அவர் என்னிடம் விளையாட்டு தொடர்பாக ஆலோசனை கேட்டு வந்தார். அவர் அப்போது தனது விளையாட்டில் புகழ்பெற்று வந்தார். அதுவே விளையாட்டில் அவருக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது.அவர் தான் பிறந்து வளர்ந்தபோது இருந்த பெண்களோடு தான் நட்புணர்வு கொண்டிருந்தார். பிறகு தான் அவர் புகழ்பெற்று ஏராளமான மாத, வார இதழ்களின் அட்டைப்படங்களில் இடம்பிடித்தார். பிறகு ஃபெண்டி, குசி ஆகிய நிறுவனங்களில் சில உலகளாவிய பிரசார திட்டங்களில் இடம்பெற்றார். அவர் தனக்குப் பிடித்த விளையாட்டில் சாதிக்க ஆசைப்பட்டார். அதேசமயம், தனது கல்லூரியையும், அதிலுள்ள நண்பர்களையும் விரும்பினார். 


நான் அவரிடம் பேசிய சில மாதங்களுக்குப் பிறகு அவர் ஃப்ரீ ஸ்கையர்ஸ் விளையாட்டில் சாதித்துக் காட்டினார். அவரின் வெற்றி சீன மற்றும் சீன அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு பெரும் உற்சாகம் ஊட்டியது. இது ஆண்களின் தாக்கம் அதிகம் கொண்ட துறை. ஆனால் அதிலும் தனது கடின உழைப்பால் எய்லீன் கு சாதித்துள்ளார். -கஸ் கென்வொர்த்தி


வாலெரி மாசன் - டெல்மோடே அண்ட் பான்மாவோ ஜாய்


எச்சரிக்கை மணி 


அறிவியலாளர்கள் பல்வேறு ஆண்டுகளாக பூமியில் ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்த இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இதில் முக்கியமானது, காலநிலை மாற்றம். அந்த வகையில் ஐ.நாவின் இன்டர்கவர்ன்மென்டல் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச் அமைப்பு உலகளவில் முக்கியமானது. அதில், 2021ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று வெளியானது. அதில் பூமி காலநிலை மாற்றத்தால் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தயாரித்த விதம்தான் ஆச்சரியமானது. முழுக்க கோவிட் கால தடைகள், விதிகள் அமலில் இருக்க, ஆய்வு முழுக்க ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் 200 காலநிலை மாற்ற ஆய்வாளர்கள் பங்கேற்றனர். 14 ஆயிரம் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சீன காலநிலை மாற்ற ஆய்வாளரான பான்மாவோ ஜாய், பிரெஞ்சு காலநிலை ஆய்வாளரான வாலெரி மாசன் டெல்மாடே ஆகியோர் இதில் உதவி தலைவர்களாக இருந்தனர். -பில் மெக்கிப்பன்


எமிலி ஆஸ்டர்



குழந்தை வளர்ப்பு தொடர்பான டேட்டா. 


குழந்தை வளர்ப்பு என்பது எளிதல்ல. குழந்தையைப் பெறும், பெற்ற பிறகு பெற்றோர்களுக்கு ஏராளமான அறிவுரைகள் எல்லாப்புறத்திலிருந்தும் கிடைக்கின்றன. இதற்கு எந்த அறிவியல் நிரூபணங்களும் கிடையாது. ஆனால் அப்படிக் கிடைத்தால் எப்படியிருக்கும். அதைத்தான் ப்ரௌன் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியரான எமிலி ஆஸ்டர் செய்கிறார். இவர் பெற்றோர்களுக்கு தேவையான பல்வேறு தகவல்களை வழங்குகிறார்.இதற்கென எமிலி ஆஸ்டர்.நெட், பேரன்ட் டேட்டா என இரு வலைத்தளங்களை நடத்தி வருகிறார். பேரன்ட் டேட்டா தளத்தில் மாத த்திற்கு இத்தனை டாலர்கள் என பணம் கட்டி பதிந்தால் கருவுறுதல், குழந்தை வளர்ப்பு பற்றிய உருப்படியான நிறைய தகவல்களை செய்தி மடல் வாயிலாக அனுப்புகிறார். கூடுதலாக ஏதாவது கேள்விகள் கேட்கவேண்டுமென்றாலும் நீங்கள் கேட்கலாம். எக்ஸ்பெட்டிங் பெட்டர், கிரைப்ஷீட், தி ஃபேமிலி ஃப்ர்ம் என  மூன்று நூல்களை எழுதியுள்ளார். -ஸ்டீவன் பிங்கர் 


துலியோ டி ஆலிவெய்ரா - சிக்குலில்லே மோயோ 


கோவிட் 19 காலத்தில் கொரோனா அதிகம் பரவாமல் இருக்க மெனக்கெட்டவர்களில் துலியோ, சிக்குலில்லே மோயோ ஆகியோர் முக்கியமானவர்கள். ஆப்பிரிக்க நாடுகளில் நோய்த்தொற்றை தடுக்க பயணத்தடை விதிப்பது கடினம். ஆனாலும் நோய்த்தொற்றை தடுக்க இரு நபர்களும் தங்களால் இயன்ற நடவடிக்கையை எடுத்தனர் என்பதே நாம் அறியவேண்டியது. 



போஸ்வானா ஹெச்ஐவி ஆய்வகத்தின் இயக்குநரான மோயோ உள்ளார். தெற்கு ஆப்பிரிக்க பெருந்தொற்று தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநராக உள்ளவர், ஆலிவெய்ரா. அடுத்த தலைமுறை மட்டுமல்ல இந்த தலைமுறை ஆட்களே கூட ஊக்கம் பெறுவதற்கான அத்தனை திறன்களும் ஆலிவெய்ரா, மோயோ ஆகிய இருவரிடமும் உள்ளது. அவர்களின் பங்களிப்பை எதிர்காலத்திலும் நாம் பார்க்க வாய்ப்புள்ளது. 


ஜான் நெகெங்காசாங்

Image - vox, time

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்