பசுக்களைத் தாக்கி பால் சுரப்பைக் குறைத்து கொல்லும் எல்எஸ்டி நோய் - பாதுகாப்பது எப்படி?

 

 

 

 Free vector graphics of Cow

 

 

பசுக்களைக் காப்பாற்றுங்கள் - தலித்துகளுக்கு எதிரான கட்டுரை அல்ல


கால்நடைகளை தாக்கும் வைரஸ் நோய்  வேகமாக வட இந்தியாவில் பரவி வருகிறது. அதன் பெயர் எல்எஸ்டி. போதை வஸ்தாது பெயர் என்பதால் அதே அளவுக்கு கிளுகிளுப்பாக இருக்கும் என நினைக்கவேண்டாம். இது பசுக்களை கொன்று வருகிற வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர்.

லம்பி ஸ்கின் டிசீஸ் என்பதுதான் எல்எஸ்டிக்கான விளக்கம். கார்பிபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸ் இந்நோயை ஏற்படுத்துகிறது.

உணவு, நீர் ஆகியவற்றில் ஏற்படும் கலப்படம் மற்றும் பூச்சிகள், கொசு, உண்ணி ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய் கால்நடைகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு பரவுகிறது.

நோய் பரவி முதிர்ச்சி அடையும் காலம் 4 முதல் 14 நாட்கள்.

பசுக்களின் நிணநீர் கணுக்கள் வழியாக கிருமிகள் பரவி பசுக்களைப் பாதிக்கின்றன.

அறிகுறிகள் என்னென்ன?

உடல் வெப்பம் அதிகரிப்பு, சரியாக சாப்பிட முடியாது, பால் சுரப்பு குறைந்துவிடும், மூக்கில் நீர் வடிவது, எடை குறைவு

ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், மகாராஷ்டிரா, உ.பி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தி அதிகம். இங்குதான் அதிகளவு கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எல்எஸ்டியால் பாதிக்கப்பட்டு இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளன.

இந்தியாவின் பால் உற்பத்தித்துறை மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய். எனவே கால்நடைகள் மரணமுற்றால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

1929ஆம் ஆண்டு முதல்முறையாக எல்எஸ்டியை ஜாம்பியாவில் கண்டுபிடித்தனர். பிறகு இந்த வைரஸ் பாதிப்பு 2019ஆம் ஆண்டு வங்கதேசத்தில் காணப்பட்டது. அதே ஆண்டில் நோய் பாதிப்பு மேற்கு வங்கம், ஒடிஷாவில் கண்டறியப்பட்டது.

எல்எஸ்டியை குணப்படுத்த முடியாது. நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்