சிங்கம் செத்துவிட்டது - மிருகராஜூ - சிரஞ்சீவி, சிம்ரன், பிரம்மானந்தம், நாகபாபு

 

 


 

 

 

 

 

 

 

 மிருகராஜூ

இயக்கம் குணசேகர்


படத்தின் கதை எங்கே நடக்கிறது என்று கேட்டுவிடக்கூடாது ஏதோ ஒரு கிரகத்தில் நடைபெறுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இந்த படத்திற்கும் நமக்கும் மஞ்சிதி...

பழங்குடிகள் வாழும் காடு. அங்கு ரயில் செல்வதற்கான இருப்புபாதை கொண்ட பாலம் ஒன்றைக் கட்ட நினைக்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் சிங்கத்தால் கட்டுமான பொறியாளர் கொல்லப்படுகிறார். இதனால் புதிதாக அங்கு பெண் பொறியாளர் வருகிறார். ஆனால் அவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை. ஆட்கொல்லியாக மாறிவிட்ட சிங்கம்தான். எத்தனை தான் இருக்கிறது என தெரியாமலேயே வேட்டையாடுவேன் என பெண் பொறியாளர் சொல்லுகிறார். ஆனால் பழங்குடி தலைவர் காட்டுக்குள் உள்ள ராஜூ என்ற பழங்குடி ஆளை சிங்கத்தை வேட்டையாட கூட்டி வருகிறார். அவருக்கும் பெண் பொறியாளருக்கும் உள்ள தொடர்பு என்ன, சிங்கத்தை வேட்டையாடினார்களா இல்லையா என்பதே கதை.

படத்தில் சிரஞ்சீவியை விட அதிக காட்சிகளில் கிராபிக்ஸ் சிங்கம் ஒன்றுதான் நடமாடுகிறது. ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. பழங்குடிகள் சிங்கத்தின் மூலம் கொல்லப்படுவதை தடுக்க ராஜூ எடுக்கும் முயற்சிகள் என்பது ஒரு கதை. அடுத்து, அங்கு கஞ்சா விளைவித்து விற்று பணம் சம்பாதிக்கும் நிலக்கிழார், வனக் காவலர் ஆகியோரின் காரணமாக பாலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் என இவைதான் படத்தின் பெரும்பகுதியில் உள்ளன. பாதிக்கும் மேல்தான் பெண் பொறியாளருக்கும் ராஜூவுக்கும் உள்ள தொடர்பு தெரியவருகிறது. அது கொஞ்சம் ஆச்சரியமான திருப்புமுனை தான். ஆனால் படத்தில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. சுவாரசியத்தை தரவில்லை.

பழங்குடியை அவரின் இயல்பு, கலாசாரம் தெரியாமல் நகரத்திலுள்ள பெண் எப்படி திருமணம் செய்துகொள்வார். அதுவும் இருபது நிமிடத்திற்குள் எப்படி முடிவெடுத்து  என்பது அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருந்தது. படத்தில் நமக்குள் உருவாகும் கேள்விகளுக்கு நாமே பதில் சொல்லிக்கொண்டால் மட்டுமே படத்தைப் பார்க்க முடியும். இல்லையென்றால் அந்த வேட்டையாடும் சிங்கத்தால் நாமே வேட்டையாடப்பட்டால் என்ன என்று தோன்றும். ஆனால் பாருங்கள். அந்த சிங்கம் கூட இறுதிக்காட்சியில் குறுவாளால் கொல்லப்பட்டு செத்துப்போகிறது.. உண்மையில் சாவது சிங்கம் மட்டுமல்ல....



சிங்கம் செத்துவிட்டது

கோமாளிமேடை டீம்

கருத்துகள்