நினைத்து வெகுகாலமாகிவிட்டது மின்னூல் வெளியீடு - கூகுள் புக்ஸ் பிளே சென்டர்

 








இரா.முருகானந்தம், வினோத், கதிரவன் என மூன்று வெவ்வேறு நண்பர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த நூல். இதில் அக்காலகட்ட அரசியல், சமூகம், உடல், உள்ள பிரச்னைகள் பேசப்பட்டுள்ளன. மேறகூறிய மூவரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். முருகானந்தம், அரசியல், பேச்சு, நூல்களை வாசித்து அதை பகிர்வதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலையைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் இந்தியா முழுக்க அலைந்து திரிந்தவர். அப்படி சேர்த்த அனுபவங்களைக் கொண்டு பயண நூல் ஒன்றைக் கூட எழுதி வெளியிட்டிருக்கிறார். இடதுசாரி எழுத்தாளரான கதிரவன், சமூக நோக்கம் கொண்டவர். அவரது குடும்பமே இடதுசாரி சித்தாந்த அடிப்படையைக் கொண்டது. இவர் தமிழ் நாளிதழ் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

இந்த மூன்று நண்பர்களிடமும் நான் இடையறாது கடிதம் எழுதி உரையாடியதுதான் இப்போது நூலாகி இருக்கிறது. இன்று தகவல்தொடர்புக்கான காசு மலிவாகி இருக்கிறது. ஆனால் இதயங்களால் நாம் வெகு தொலைவில் தள்ளி இருக்கிறோம். அந்த இடைவெளியை இக்கடித நூல் குறைக்கும். பிறரோடு தகவல் தொடர்பு கொள்வது, அறிவை, அனுபவத்தை பகிர்வது எந்தளவு முக்கியம் என்பதை நினைத்து வெகுகாலமாகிவிட்டது என்ற நூல் உணர்த்தும் என நம்புகிறேன்.


அமேஸானில் புதிய அல்காரிதம் நூலையும், நூலின் அட்டையும் கூட ஏற்றுக்கொள்ளாமல் போராட்டம் செய்தது. எனவே, வேறு வழியின்றி கூகுள் நிறுவனத்தின் பிளே புக்ஸ் சென்டரை அணுகி நூலை வெளியிட்டிருக்கிறேன். வேறு வழியில்லை. இப்போதுதான் அமேஸானின் விதிமுறைகள் கையேட்டை தரவிறக்கியுள்ளேன். அதை படித்துவிட்டு அமேஸானில் இனி எதிர்காலத்தில் நூலை பதிவிட முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். அப்படியல்லாதபோது வாசகர்கள், நண்பர்கள் கூகுள் புக்ஸ் தளத்தில் எனது நூலை வாங்கலாம். அல்லது நூலை இலவசமாக சில பக்கங்களை வாசித்துப் பார்க்கலாம்.  எந்த சூழலிலும் வாசிப்பை நிறுத்தக்கூடாது. அதேபோல்தான், நமக்கு தோன்றிய கருத்தை எழுதுவதும் அதை சுதந்திரமாக வெளியிடுவதையும் கூட கருதுகிறேன். எனவே, எனது அடுத்த நூலான சத்யமேவ ஜெயதேவும் கூட மின்னூல் வடிவில் கூகுள் புக்ஸில்தான் வெளியாகவிருக்கிறது என்ற தகவலையும் இங்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி...




நூலை வாசிக்க க்ளிக் செய்யுங்கள்....

https://books.google.co.in/books?id=uLSFEAAAQBAJ&newbks=0&hl=en&source=newbks_fb&redir_esc=y


அல்லது க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்க....






கருத்துகள்