மெல்ல தற்கொலைக்கு தூண்டும் குறைபாடு - மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் -எம்டிடி

 







மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர்


வேலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, எண்டோவ்மென்ட் பாலிசி கட்ட வேண்டிய காலம் என சம்பாதிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் உருவாகலாம். பொறுப்புகள் மனதிற்கு சுமையாகத் தோன்றும்போது மனச்சோர்வு உருவாகிறது. இதனை ஒருவர் எளிதில் கையாள முடிந்தால் வெளியே வந்துவிடலாம். ஆனால் மனச்சோர்வு புதிர்ப்பாதையாக தோன்றும்போது, அவர்களுக்கு திகைப்பாகிவிடும். 


மேஜர் டிப்ரசிவ் டிஸார்டரைப் பொறுத்தவரை ஒருவருக்கு முதலில் ஏற்படும் மனச்சோர்வுக்கு மட்டுமே காரணம் இருக்கு்ம். அதாவது சில வகை தூண்டுதல். அதற்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வுக்கு எந்த காரணமும் இருக்காது. இந்த மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு சோகம் என்பதை விட அனைத்திலும் எரிச்சல் இருக்கும். தினசரி செய்யும் செயல்களிலும் அது தீவிரமாக வெளிப்படத் தொடங்கும். 


பொதுவான சமூக நிகழ்ச்சிகளில் மனச்சோர்வு குறைபாடு உள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சாப்பிடுவதைக் கூட ரசிக்க முடியாது. செய்கிமா 2 மெட்டல் இசையைக் கூட ரசிக்க மாட்டார்கள். சரியாக தூங்க முடியாது. உடலில் வலி இருப்பது போல தோன்றும். அவர்களுக்கு இந்த பிரச்னையிலிருந்து வெளியே வரும் ஒரே வழியாக தற்கொலை மட்டுமே தோன்றும். அபத்தமான இந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறும் சிறந்த வழி தற்கொலைதான். ஆனாலும் நாம் அதைத் தேர்ந்தெடுக்க கூடாது. மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றும் கூட அதிகமாகவே உள்ளது. எம்டிடி நோயாளிகளுக்கு மாயக்காட்சிகள் தோன்றும். 


காரணம் என்ன?


மூளையில் ஏற்படும் முரண்பாடுகள். பொதுவாக ஒருவர் தன் வேலையில் இருக்கும்போது அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காதபோது, தான் அதற்கு தகுதியில்லாதவன், பொருந்தாதவன் என்று தோன்றும் இப்படி தோன்றும் எண்ணங்களின் அடர்த்தியைப் பொறுத்து மனநல குறைபாடு -எம்டிடி தோன்றுகிறது. எம்டிடிக்கு சிறுவயதில் துன்பங்கள் ஏற்படும் சூழலில் கையறு நிலையில் இருந்த நினைவுகளும் முக்கியமான காரணம்.  அடுத்து சூழல், மரபணு ஆகியவை காரணமாக உள்ளன. 


மோசமான பணிச்சூழல், சாதி, மதம், இனம் சார்ந்து நசுக்கப்படுதல், உறவுகள் சரியாக அமையாதது, மோசமான பொருளாதார சூழல், நண்பர்களை, மனைவி, காதலியை இழப்பது ஆகியவையும் மனச்சோர்வுக்கு இட்டுசெல்கிறது. 


மரபணு என்பதை மூளையில் நடைபெறும் தாறுமாறு செயல்கள் என்று கூறலாம். இதன்படி, கார்டிசோல், செரடோனின் போன்றவை் அதிகமாக சுரப்பதும் ஒருவகையில்  எம்டிடியை தீவிரமாக்குகிறது. பாதிப்பிற்கான அறிகுறியைப் பொறுத்து குடும்ப மருத்துவரை அணுகினால் அவர் தேவையான மருந்து சிகிச்சைகளை பரிந்துரைப்பார். 


 அறிகுறிகள்


சோகம், நம்பிக்கையின்மை, நாள் முழுக்க சோர்வான நடவடிக்கைகள்


செய்யும் வேலைகளில் ஆர்வமின்மை


பசி எடுக்கும் நேரம் மாறும். ஒன்று அதிகமாக சாப்பிடுவது அல்லது குறைவாக சாப்பிடுவது. குழந்தைகளுக்கு குறைபாடு இருந்தால் அவர்களின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். 


இன்சோம்னியா என தூக்கமே வராமல் தவிப்பது அல்லது ஹைப்பர்சோம்னியா என எப்போதும் அதிக நேரம் தூங்குவது. 


சிந்திக்கும் வேகம் குறையும். பேச்சு, உடல் நடவடிக்கைகளும் குறைந்துகொண்டே வரும். 


சிறு தோல்விகளுக்கு கூட அவ்வளவுதானா வாழ்க்கை என்று தோன்றும். 


எப்போதும் இறப்பு, தற்கொலை ஆகியவை பற்றிய எண்ணங்களே மிகும். 


****************************************************


நல்ல விஷயங்களை விட மோசமான செய்திகளே ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. எம்டிடி நோயாளிகள், எளிதாக எதிர்மறை செய்திகளால் ஈர்க்கப்படுவார்கள். நேர்மறையான விஷயங்களைப் பற்றி எனக்கென்ன அக்கறை என்பதுபோல நடந்துகொள்வார்கள். அவர்களை உட்கார வைத்து பேசி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டும். 


மனிதர்களைப் பார்த்தாலே பதறி விலகி ஓடும் நிலையில் இருப்பார்கள். நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சமூக திறன் பயிற்சிகளை வழங்கவேண்டும். நட்போ, காதலோ நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே உருவாகும். இப்படி உறவுகளை வளர்ப்பது மட்டுமே எம்டிடி நோயாளிகளை உலகில் வாழ வைக்கும். சைக்கோடைனமிக் சைக்கோதெரபி நோயாளிகளுக்கு உதவ வாய்ப்புள்ளது. இச்சிகிச்சை மூலம் நோயாளி உணர்வு ரீதியான வலியிலிருந்து வெளியே வர முடியும். 


------------------------------------------------------------------------------


ஃப்ளூஆக்செடைன் - புரோஸாக், செர்ட்ராலைன் -ஸோலோப்ட் இந்த மருந்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள். அறிகுறிகளுக்கு ஏற்ப  மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் மருந்துகளை சாப்பிடுவது அவசியம். இதில் சில பக்கவிளைவுகளும் உண்டு. ஆங்கில மருத்துவம் வேண்டாம் என்பவர்களுக்கு அக்குபஞ்ச்சர், அரோமா தெரபி, தியானம் ஆகியவை உண்டு. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, காபீன் பொருட்களைத் தவிர்ப்பது உணவுமுறை கட்டுப்பாடு. 

ஐரோப்பாவில் ஜின்கோ பிலோபா என்று மூலிகை மனச்சோர்வுக்கு மருந்தாக பயன்படுகிறது. பயன்படுத்தும் அளவு, எப்படி பயன்படுத்துவது என்பதில் கவனமாக இருப்பது முக்கியம். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்