ஆளுமை பிறழ்வுக்கு என்ன காரணம்?
ஆளுமை என்பதை நூல் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். சுய முன்னேற்ற நூல்களில் ஆளுமை என்பது முக்கியமான வார்த்தையும் கூட. ஒருவர் பேசுவது, சிந்திப்பது, செயல்படுவது ஆகியவற்றில் தனது கலாசாரம் சார்ந்த தன்மைகளை தாண்டி இருப்பது ஆளுமைக் குறைபாடு அல்லது பிறழ்வு என கூறலாம். அதாவது சமூகத்தை சீர்திருத்துபவர்களை இதில் உள்ளடக்க முடியாது. குறிப்பிட்ட தன்மையில் யோசிப்பது, செயல்படுவது ஆகியவற்றால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல், மனம் என இரண்டுமே பாதிக்கப்படும் நிலை என புரிந்துகொள்ளலாம். உளவியலாளர், ஒருவருக்கு ஆளுமை பிறழ்வு உண்டா இல்லையா என சோதனை மூலம் உறுதி செய்ய முடியும்.
ஆளுமை பிறழ்வு அல்லது குறைபாடு வகையில் மொத்தம் பத்து வகைகள் உள்ளன. பாரனாய்டு, ஸிசோய்டு, ஸிசோடைபால், ஆன்டி சோசியல், பார்டர்லைன், ஹிஸ்டிரியோனிக், நார்சிஸ்டிக், அவாய்ட்ன்ட், டிபென்டன்ட்,ஆப்செசிவ் கம்பல்சிவ். இவற்றைப் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் திகைப்பாகவே இருக்கும். எப்படி உச்சரிப்பது என்பது முக்கியல்ல. என்ன அறிகுறிகள், பாதிப்பை குறைத்து கட்டுப்படுத்துவது மட்டுமே அவசியமானது. மனநல குறைபாடுகளுக்கு தீர்வு கிடையாது. மருந்துகள், சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
மனநல குறைபாடுகள் பிற நோய்களைப் போல அல்ல. ஒரு குறைபாடு உள்ளவரிடம் இன்னொரு மனநல குறைபாட்டிற்கான அறிகுறிகள் கூட தெரியும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் போலத்தான். ஒன்று வரும் அடுத்து அதைப் பின்பற்றி இன்னொன்று வரும். மருத்துவ சிகிச்சையை நாடினால் ஒருவர் தினசரி வாழ்க்கையை பழுதில்லாமல் வாழ முடியும். இன்றைய நவீன காலத்தில் மனநல குறைபாடு அதற்கான சிகிச்சை பெறுவதை வெளிப்படையாகவே கூறத் தொடங்கியுள்ளனர். இது நல்ல அறிகுறிதான். இதன்மூலம் தன்னைப் பற்றி பிறர் தவறாக நினைப்பார்களோ என நினைப்பவர்கள் கூட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆளுமை பிறழ்வுக்கான காரணம் இதுவென உறுதியாக எதையும் கூற முடியாது. அடிப்படையில் குழந்தைப்பருவம், வளர்ந்த பருவம் ஆகியவற்றில் ஒருவர் பெறும் அனுபவங்கள் அவரைப் பாதிக்கின்றன. இப்படி பாதிப்படைபவர்கள் சற்று அழுத்தமாக இருப்பார்கள். இவர்களை நெகிழ்வாக்கி டாக் தெரபி மூலம் தனது அனுபவங்களை வெளியே சொல்ல வைக்கிறார்கள். இதனால் மன இறுக்கம் குறைந்து மனநல குறைபாட்டின் விளைவுகள் சற்று குறைகின்றன.
pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக