முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ தலையிடும் அதிகாரச்சண்டை! - டெக்கன் பிளட் வென்ஜென்ஸ் - அனிமேஷன்

 

 

 

 

 

 

 

 

See the source image

 


 

 

 டெக்கன் பிளட் வென்ஜென்ஸ்

அனிமேஷன் - ஜப்பான் அப்பா, மகன், பேரன் என மூன்று பேரும் டெக் நிறுவனங்களை வைத்து நடத்துகிறார்கள். ஜி கார்ப்பரேஷன், மிஷிமா என பல்வேறு பெயர்களில் நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள். அடிப்படையில் அத்தனை நிறுவனங்களிலும் அவர்கள் செய்வது ஒருவருக்கு இறப்பே இல்லாத செல்களைக் கண்டுபிடித்து அதை இளைஞர்களின் உடலில் செலுத்தி சோதிப்பது. சோதனை வெற்றியடைந்தால் பயன் நிறுவனத் தலைவர்களுக்கு.. தோல்வியடைந்தால் அது அந்த இளைஞனின் விதி..

மூன்று தலைமுறையினருக்கும் நடக்கும் அதிகாரப்போட்டி நிறைய மக்களின் வாழ்க்கையை முற்றாக அழிக்கிறது. அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. இறுதியாக உலகை ஆள்வது யார் என்ற கேள்விக்கு பதில் நான்தான் என மூன்று பேரும் சொல்லிவிட்டு ஒருவருக்கொருவர் மோதுகிறார்கள் இறுதி வெற்றி யாருக்கு என்பதை ரத்தம் தெறிக்க நரம்பு புடைக்க கட்டிடங்கள் உடைந்த நொறுக்க பீதியூட்டும்படி சொல்லுகிற படம் இது.

ஜப்பானில் உள்ள பள்ளியொன்றில் படிக்கும் மாணவர்கள் திடீரென காணாமல் போகிறார்கள். அதில் ஒருவன் மட்டுமே மிஞ்சுகிறான். ஆனாலும் அவன் தன் அடையாளத்தை மறைத்து வாழ்கிறான். அவனைக் கண்டுபிடிக்க இரு எதிரெதிர் அணி ஆட்கள் இரண்டு ஆட்களை ரெடி செய்கிறார்கள். ஒரு பெண் தற்காப்புக்கலையில் அடித்து தூள் கிளப்பும் பள்ளிச்சிறுமி. இன்னொருத்தி பாசமாக பண்பாக பேசும் ஃபேன்டசி கதைகளில் வரும் தேவதை போன்றவள். அவள் யார் என படத்தின் இடையில் தெரியும்போது ஏற்படும் ஆச்சரியம் முக்கியம்.

ஒருகட்டத்தில் எதிரெதிர் அணியிலுள்ள இருவரும் தாங்கள் யார் என்பதை புரிந்துகொண்டு ஒருவரையொருவர் அடித்து வீழ்த்த கிளம்புகிறார்கள். சண்டைக்காட்சிகள் மிரட்டலாக உள்ளது. சண்டையின் இறுதியில் இருவரும் நட்பாக பழகியதால் ஒருவரையொருவர் விட்டுக்கொடு்க்க முடியவில்லை. இருவரும் ஒன்றாக சேர்ந்து பள்ளியில் காணாமல் போன மாணவனை மீட்க கிளம்புகிறார்கள். அவன் பெயர் ஷின். இரண்டு பெண்களுமே அவனை விரும்புகிறார்கள்.

இந்த சூழலில் இரண்டு பெண்களை உளவாளியாக வேலை பார்க்க வைத்த எதிரணியில் சூபர்வைசர்கள் இருவருமே பெண்கள். அன்னா, நினா என்பதுதான் இவர்களின் பெயர். இருவருமே முதல்காட்சி தொடங்கி இறுதிவரை சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள். படத்தில் நம்மை நெக்குருக வைப்பது ஃபேன்டசி தேவதை போல வரும் பெண்தான். தனது முதலாளியைக் காக்க எதிரியை அழிக்க உடலே சிதைவுண்டபோதும் முயலும் காட்சி பிரமாதமாக உள்ளளது.

இறுதிக்காட்சியில் வரும் பறவைகள் போல சிறகு விரித்து போடும் சண்டை மிரட்டலாக உள்ளது.

அதிகாரச்சண்டை

கோமாளிமேடை டீம்

Thanks - Michael

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை