இடுகைகள்

ஆம் ஆத்மி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊழல், மோசமான நிர்வாகத்திலிருந்து பஞ்சாப்பை ஆம் ஆத்மி மீட்கும்! - ஹர்பால்சிங் சீமா

படம்
  ஹர்பால்சிங் சீமா ஹர்பால் சிங் சீமா ஆம் ஆத்மி தலைவர், பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் கட்சி, இத்தேர்தல் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மிக்கு இடையில்தான் நடக்கிறது என கூறியிருக்கிறது. காங்கிரசிடமிருந்து பதினைந்து சீட்டுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காங்கிரஸ், சிரோமணி என இரண்டு கட்சிகளும் பதினைந்து இடங்களை பிடிக்கும் என நினைக்கிறேன். முழு கிராமங்களுமே ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும். இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல்தான். மக்கள், அகாலி, காங்கிரஸ கட்சியினரின் மோசமான ஊழல்களை பார்த்துவிட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மியைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள்.  ஆனால் ஆம் ஆத்மி என்பது டெல்லியைச் சேர்ந்த கட்சிதானே? அது பஞ்சாப்பைச் சேர்ந்தது அல்லவே? இது தவறானது. நான் அகாலி கட்சியினரைக் கேட்கிறேன். அவர்களது கூட்டணி கட்சி எங்கிருந்து வந்தார்கள்? பாஜகவின் தலைமையகம் கூட டெல்லிதானே? ஆம் ஆத்மியின் தலைமையகம் டெல்லியில் இருப்பதில் என்ன பிரச்னை? ஆம் ஆத்மி என்பது தேசிய கட்சி. அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதல்வராக இருக்கிறார். நாங்கள் வெளிநபர் என எதிர்க்கட்சிகள்