இடுகைகள்

இந்தியா - விவாகரத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிகரிக்கும் விவாகரத்து- என்ன பிரச்னை?

படம்
விவாகரத்து ஈஸி - பெண்களின் புதிய வாழ்க்கை இதுதான். இந்தியாவில் திருமணமாகாமல் இருப்பவர்களை எப்படி பாக்டீரியா, வைரஸ் போல பார்க்கிறார்களோ, அதே நிலைமைதான் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்களுக்கும். 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் விவாகரத்து அளவு 1% என இருந்தது இன்று அதிகரித்திருக்கிறது. அதாவது, ஆயிரத்து ஒருவர் என்ற நிலைமை ஆயிரத்து பதிமூன்று என கூடியிருக்கிறது. மனதளவில் இது எப்படி? என பார்த்தால் அதிர்ச்சியாகிறது. விவாகரத்து பெற்ற நாளை பார்ட்டி வைத்து கொண்டாடும் மனநிலையில் இப்பெண்கள் இருக்கிறார்கள். அவ்வளவு எளிதாக உறவு உடைதலை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இதற்கு அன்புடன் அந்தரங்கம் பகுதிக்கு கடிதம் எழுதிப்போட்டு முடிவு எடுக்கவில்லை. பொருளாதார சுதந்திரத்தினால் அவர்களாகவே முடிவு எடுக்கிறார்கள். சுயமாக முடிவெடுக்க பெண்களுக்கு இன்று முடிகிறது என்பது சற்று ஆசுவாசமளிக்கிற விஷயம். மகராஷ்டிரம், குஜராத், ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் விவாகரத்து விஷயங்களில் முன்னணி வகிக்கின்றன. விவாகரத்து என்றால் தனிப்பட்ட விஷயம் என