இடுகைகள்

சம்பளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பின மக்களின் உரிமைக்காக போராடும் போராளிகள் - ராமோகி ஹூமா, எரின் ஹார்ன் மெக்கின்னே

படம்
  ராமோகி ஹூமா ramogi huma 1995ஆம் ஆண்டு, டோனி எட்வர்ஸ் என்ற விளையாட்டு வீரரை, விளையாட்டு சங்கம் 150 டாலர் மதிப்புள்ள காய்கறிகளைப் பெற்றார் என்று புகார் சொல்லி விளையாட தடை விதித்தது. அதை எதிர்த்து போரிட்ட வழக்குரைஞர் ராமோகி ஹுமா. அப்போது அவர், இப்படியெல்லாம் புகார் கூறி தடைவிதிக்க தொடங்கினால், டோனி தன்னுடைய ஜெர்சியை விற்றால் கூட அதையும் விதியைக்காட்டி தவறு என்று சொல்லி தண்டனை விதிப்பார்கள் என்று கூறி விமர்சித்தார்.  இந்த வழக்குக்கு பிறகு ஹூமா, தேசிய கல்லூரி வீரர்கள் சங்கம் என்ற அமைப்பை 2001ஆம் ஆண்டு தொடங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் இனவெறி, மதம், உதவித்தொகை சார்ந்த பிரச்னைகளை தீர்த்து வருகிறார். 2020ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க அமெரிக்க வீரர்களை எப்படி விளையாட்டு சங்கம் பயன்படுத்தி சம்பாதிக்கிறது என்ற அறிக்கையை கல்லூரி பேராசிரியர் எல்லன் ஜே ஸ்ட்ராவோஸ்கியுடன் சேர்ந்து வெளியிட்டார். ஹூமாவின் செயல்பாடு காரணமாக பேஸ்பால் விளையாட்டு சங்கம், மூன்றாவது தரப்பு நிதியுதவியை வீரர்கள் பெறலாம் என அனுமதித்துள்ளது. அவர்களுக்கு தகுதிக்குரிய கட்டணத்தையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளியில் விள

ஆசிரியர் வேலையா, வேண்டவே வேண்டாம் என பதறும் அமெரிக்க மாணவர்கள்!

படம்
  அமெரிக்காவில் ஆசிரியர் வேலையை கைவிடும் தலைமுறையினர்! அமெரிக்காவில் ஆசிரியர் தொழிலை கையில் எடுத்து பணியாற்றும் ஆட்கள் படிப்படியாக குறைந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் என பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, குறைந்த சம்பளம், அதிகவேலை ஆகியவற்றைக் காரணமாக கூறலாம். நமது ஊரின் டெலிகிராம், டெய்லிபுஷ்பம் ஆகிய நாளிதழ்களில் வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உழைப்பு கதையெல்லாம் அமெரிக்காவில் கூட நடந்து வந்தவைதான். ஆனால், இப்போது அதுபோல எந்த மாணவரும் பேட்டி கொடுப்பாரா என தெரியவில்லை. ஒரு ஆசிரியரே பல்வேறு பாடங்களை எடுக்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு ஆசிரியரின் மாணவர்களையும் சேர்த்து பார்க்கவேண்டியதிருக்கிறது என பிரச்னைகள் நீள்கின்றன.   ஆசிரியர் வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் என்பது மாகாணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.அது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாறும் சம்பளம் விலைவாசிக்கு ஏற்றபடி இருக்கிறதா என்றால் இல்லை. ஆண்டுக்கு 48 ஆயிரம் டாலர்கள் என்பது மிக குறைவான சம்பளம். இதை வைத்து ஆசிரியர், அவரது மனைவி, குழந்தை என மூன்று பேர் கொண்ட குடும்பத்தை பசி, பட்டினியின்றி ஓட்டுவதே மிக கடினம்.சில ம

மேகன் ராபினோ - பெண்களுக்கான உரிமைப் போராளி

படம்
  மேகன் ராபினோ - கால்பந்து உலகின் கலகத் தலைவி மேகன் ராபினோ மேகன் ராபினோ தனது இணையரான சூ பேர்டுடன்... மேகன் ராபினோ – கால்பந்து உலகின் உரிமைப் போராளி   பெண்கள் கால்பந்துபோட்டிகளை ஆக்ரோஷமானதாக மாற்றி அதை லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும்படி செய்த அமெரிக்க விளையாட்டு வீரர்களில் முக்கியமானவர் மேகன் ராபினோ. இவரது தந்தை கட்டடங்களை கட்டித்தரும் ஒப்பந்ததாரர். அம்மா, ஹோட்டல் ஒன்றில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். ராபினோவுக்கு, அவருடன் பிறந்த இரட்டையரான சகோதரி ஒருவர் உண்டு. தற்போது 38 வயதாகும் மேகன் ராபினோ, இளம் வீரர்களுக்கு முன்மாதிரியான வீரர்.   ஐந்து அடி ஏழு அங்குலம்   உள்ள இவர், பெண்களுக்கு சம ஊதியம், பால்புதுமையினருக்கு விளையாட்டு அணியில் விளையாட உரிமை ஆகியவற்றை கேட்டு போராடி வருகிற போராளி. டச் மோர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சூ பேர்ட் என்ற தனது காதலருடன் இணைந்து தொடங்கி நடத்தி வருகிறார். அமெரிக்காவில் ராபினோவுக்கு பெண்கள் மத்தியில் பெரும் மரியாதை உண்டு. அதை அவர் களத்திலும் களத்திற்கு வெளியிலும் சம்பாதித்துக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.   2019ஆம் ஆண்டு அமெரிக்க பெண்கள் கால்பந்து

பொங்கல் மலருக்கான எடிட்டிங் ஜரூர்!

படம்
பொங்கல் மலருக்கு வேலை செய்வது என்றால், என்னைப் பொறுத்தவரை கட்டுரை எழுதுவதுதான். ஆனால், சண்முகம் சார் வேலைப்பளுவினாலா அல்லது வேறு சிக்கலாலா என்று தெரியவில்லை. என்னை ராவான கட்டுரைகளை படித்து பார்த்து செம்மை செய்யச் சொன்னார். ஆனால் மறுக்கும் நிலையில் இல்லை. கட்டுரைகளை ஃபோல்டரில் போட்டுக்கொண்டே இருந்தார் சண்முகம் சார். நான் அவற்றை திருத்தி தலைப்புகளை மாற்றினேன்.  பெரும்பாலான தினசரி செய்தியாளர்களுக்கு செய்தி எழுதுவது தெரியும். ஆனால் பொங்கல், தீபாவளி மேட்டருக்கான ஐடியாக்களைக் கொடுத்து அதை செவ்வனே எழுதுவது என்றால் எழுதிவிடுவார்கள். ஆனால் அதில் எது முக்கியமோ அதை முன்னிலைப்படுத்தி எழுத வராது. அனைத்தையுமே எழுதியிருப்பார்கள். அதில் நாம் எது முக்கியமோ அதை சற்று முக்கியப்படுத்தி எடுத்து சற்று மாற்றியமைக்க வேண்டும். அப்படித்தான் நான் புரிந்துகொண்டு எழுதினேன். நன்றாக செய்தேனா என்று தெரியவில்லை. ஆனால் சண்முகம் சார் புகார் ஏதும் சொல்லவில்லை. ''நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரவ் டிராஃப்ட் போல வரும் அதை சற்று திருத்தி எழுதிக்கொடுங்கள்'’ என்றார். முடிந்தவரை அவர் சொன்ன விதிகளை மனதில் கொண்டி

பொதுமுடக்க காலத்தில் பெண்களின் நிலை எப்படியிருந்தது?

படம்
                கொரோனா காலத்தில் உறவுகளின் நிலை ! கொரோனா காலம் ஒராண்டை பறித்துக்கொண்டுவிட்டது . பிற நாடுகளில் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு நோயைக்கூட விழாவாக கொண்டாடும் மனநிலையில் உள்ளது . இந்த காலத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலையிழப்பு , சம்பள வெட்டு , பணி அழுத்தம் , வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் வெறுமை் என நிறைய சிக்கல்களை ஒருவர் சமாளிக்கவேண்டும் . கூடுதலாக மணமானவர்கள் அதிகநேரம் வீட்டிலேயே செலவழிக்க வேண்டியுள்ளது . இதன் காரணமாக அவர்களுக்குள் இன்ஸ்டன்ட் சண்டைகள் அதிகரித்துள்ளன . குழந்தைப் பிறப்புகள் குறைந்துள்ளன என்று ஆய்வுகள் கூறினாலும் அதேயளவு குடும்ப வன்முறைகளும் கூடி உள்ளன . நாம் இதில் பெண்களின் நிலை பற்றி பார்ப்போம் . வீட்டில் பெண்களுக்கு தங்களது ஆபீஸ் வேலைகள் தவிர வீட்டு வேலைகளும் இந்த காலகட்டத்தில் குறையவில்லை . அவர்களுக்கும் மன அழுத்தம் , நிதிசார்ந்த சிக்கல் , பெற்றோராக கடமைகள் என அனைத்தும் குவிகின்றன . பல்வேறு நாடுகளிலும் இதே நிலைதான் உள்ளது . ரேஷ்குர்ரம் படத்தில் விரக்தியான போலீஸ்காரராக காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடித்திருப்பார் . அந்த

வேலை வாய்ப்புச் சந்தை மாறி வருகிறது - நீங்களும் மாறுங்கள்!

படம்
வேலைவாய்ப்புச்சந்தைகள் இப்போது மாறிவருகின்றன. முதலில் லிங்க்டு இன்னில் புரபைல் பதிந்து வேலை தேடியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.இன்று நொடியில் வேலைக்கு தகுதியானவர்களா இல்லையா என அறிய டிண்டர் ஆப்பை போலவே புதிய ஆப்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி பல ஆப்கள் உள்ளன. இனிமேலும் நீங்கள் நாக்ரி.காமில் பதிந்து வைத்தேனே அதெல்லாம் வீணா என்றால் வாழ்க்கை மொத்தமும் வீணாகிவிடும். ஆட்டோமேஷன் உலகில் கிடைக்கும் வேலை எவ்வளவு முக்கியம் தெரியுமா?   ஜாப்பர், பிளாங்க். ஸ்விட்ச், வேவ், ஷேப்பர் எனும் ஆப்களை இன்று மனிதவளத்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் இனி சிபாரிசுகளை விட உங்களுக்கு தகுதிதான் முக்கியமாகப் போகிறது. டிண்டர் என்பது ஜாலியான டேட்டிங் ஆப். அதற்கும் வேலைக்கும் வித்தியாசம் இல்லையா என சிலர் கேட்கலாம். உண்மைதான் டெக் ஆட்கள் புரிந்துகொண்டது அதன் இடைமுக எளிமைத்தன்மையை மட்டுமே. எளிமையாக சில கம்பெனிகளைப் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் அதனை ஸ்வைப் செய்து அந்த நிறுவன ஹெச் ஆர் ஆட்களிடம் ஆப் லைனில் பேசலாம். அவர்கள் தேடிய ஆட்களில் நீங்களும் ஒருவர் என நம்பிக்கை தோன்ற