பொதுமுடக்க காலத்தில் பெண்களின் நிலை எப்படியிருந்தது?
கொரோனா காலத்தில் உறவுகளின் நிலை!
கொரோனா காலம் ஒராண்டை பறித்துக்கொண்டுவிட்டது. பிற நாடுகளில் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு நோயைக்கூட விழாவாக கொண்டாடும் மனநிலையில் உள்ளது. இந்த காலத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலையிழப்பு, சம்பள வெட்டு, பணி அழுத்தம், வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் வெறுமை் என நிறைய சிக்கல்களை ஒருவர் சமாளிக்கவேண்டும். கூடுதலாக மணமானவர்கள் அதிகநேரம் வீட்டிலேயே செலவழிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்குள் இன்ஸ்டன்ட் சண்டைகள் அதிகரித்துள்ளன. குழந்தைப் பிறப்புகள் குறைந்துள்ளன என்று ஆய்வுகள் கூறினாலும் அதேயளவு குடும்ப வன்முறைகளும் கூடி உள்ளன. நாம் இதில் பெண்களின் நிலை பற்றி பார்ப்போம்.
வீட்டில் பெண்களுக்கு தங்களது ஆபீஸ் வேலைகள் தவிர வீட்டு வேலைகளும் இந்த காலகட்டத்தில் குறையவில்லை. அவர்களுக்கும் மன அழுத்தம், நிதிசார்ந்த சிக்கல், பெற்றோராக கடமைகள் என அனைத்தும் குவிகின்றன. பல்வேறு நாடுகளிலும் இதே நிலைதான் உள்ளது. ரேஷ்குர்ரம் படத்தில் விரக்தியான போலீஸ்காரராக
காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடித்திருப்பார். அந்த விரக்தி இப்போது பெண்களுக்கு சொந்தமாகியுள்ளது. சமூகத்தோடு இணையமுடியாத சூழல், ஆதரவின்மை, குவியும் வேலைகள் பெண்களை கோபத்தில் தள்ளுகிறது.
பொதுமுடக்க காலகட்டத்தில் உலகமெங்கும் பெண்களின் மீதான வன்முறை இருபது சதவீதம் அதிகரித்துள்ளது என ஐ.நா அமைப்பு கூறியுள்ளது. இதனை நிழல் பெருந்தொற்று என இந்த அமைப்பு கூறுகிறது. முதலில் குறைவாக இருந்தாலும் பின்னாளில் குடும்ப வன்முறையை தெரிவிக்கும் ஹாட் லைன்களுக்கு ஏராளமான அழைப்புகள் வரத்தொடங்கின. வெளியில் வரமுடியாததால் நிறைய பெண்களுக்கு போன், இணையம் போன்றவற்றை கூட எளிதில் அணுக முடியாத நிலை. கடந்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரை தேசிய பெண்கள் ஆணையத்திற்கு முந்நூறு
நூறு அழைப்புகள் வந்துள்ளன.
பெரும்பாலான பெண்கள் தங்களின் பிள்ளைகளுக்காக அமைதியாக இருக்க முயன்றாலும் உணர்வுரீதியான பாதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். கட்டாயமாக வீட்டிலேயே வேலை செய்வது தொடக்கத்தில் எளிமையானது என்றாலும் பின்னாளில் அது மனதளவில் அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது. இரண்டுபேர் வேலை செய்யும் வீடுகளில் வீட்டுவேலைகளின் அழுத்தத்திற்காக கணவர், மனைவியை வேலையை விட்டு விலகச்சொல்லி அழுத்தம் கொடுப்பதும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக பெண்களின் வேலைவாய்ப்பு 23 சதவீதம் பறிபோயுள்ளது. விருப்பமாக வேலையை விட்டுக்கொடுப்பதை விட பத்தில் நான்கு பெண்கள் வேலையை விட்டு விலக்கப்பட்டுள்ளனர். ஆண்களை விட பெண்களின் வேலை விலக்கல் அளவு 40 சதவீதமாக உள்ளது. ஆண்களின் சதவீதம் 36.6 .
இந்தியாவில் உள்ள பெண்கள் வீட்டு வேலைகளுக்காக 22 சதவீத நேரத்தை செலவிட்டுள்ளனர். விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கும் இதேயளவு நேரத்தையே ஒதுக்கியுள்ளனர். இதனை அமெரிக்காவில் உள்ள வேலை செய்யாத பெண்கள் என பார்த்தால் அவர்கள் 18 சதவீத நேரத்தை வீட்டு வேலைகளுக்காகெ ஒதுக்குகிறார்கள்.
பெருநகரங்களில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வசதி இருந்தால், அங்கெல்லாம் பெண்கள் வீடுகளில் வேலை செய்யும் நேரம் குறைகிறது. இது இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பெருமளவு வேறுபடுகிறது.
பினான்ஷியல் எக்ஸ்பிரஸ்
வைஷாலி தர்
கருத்துகள்
கருத்துரையிடுக